- Home
- Astrology
- Birth Month : இந்த மாசத்துல பொறந்தவங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னால யோசிச்சுக்கங்க! கண்டிப்பா விவகாரத்துல தான் முடியும்
Birth Month : இந்த மாசத்துல பொறந்தவங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னால யோசிச்சுக்கங்க! கண்டிப்பா விவகாரத்துல தான் முடியும்
ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களின் திருமண சில நாட்களிலேயே வாழ்க்கை விவாகரத்தில் முடியும். அது எந்தெந்த மாதங்கள் என்று இங்கு பார்க்கலாம்.

Unlucky Birth Months In Love
ஜோதிடத்தின்படி, ஒருவரது பிறந்த தேதி, ராசி, மாதத்தை வைத்து அவரது ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் தங்களது திருமண உறவில் அதிக சிரமங்களை சந்திப்பார்கள். அவர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மற்றும் தகராறு காரணமாக சில நாட்களிலேயே திருமண வாழ்க்கையானது விவாகரத்தில் முடிந்துவிடும். அவர்களுக்கு திருமண வாழ்க்கை மட்டுமல்ல காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, நிம்மதி இருக்காது என்கிறது ஜோதிடம். எனவே, இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும் என்று தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் :
ஜோதிடத்தின் படி மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள். இதனால் இவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் இது இவர்களது திருமண உறவில் உணர்ச்சி ரீதியாக முரண்பாட்டை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்களது திருமண வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியான நிலத்தன்மையை ஏதும் அனுபவிக்கவில்லை என்றாலோ, தவறான புரிதல் மற்றும் நிறைவேறாதை எதிர்பார்ப்பு காரணமாக இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிடும்.
மே :
ஜோதிடத்தின் படி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதலை புரிந்து கொள்ள மாட்டார்கள். எப்போதுமே ஒரு விதமான சிந்தனையில் இருந்து கொண்டே இருப்பார்கள். உணர்வுகளை விட லாஜிக்கை அதிகமாக சிந்திப்பதால் இவர்கள் இந்த உறவில் இணைந்தாலும் பிரச்சனைகள் வரும். துணை மீது அக்கறை இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். இதனால் உறவில் பெரும் பிரச்சனை ஏற்படும். இந்த குணத்தாலே இவர்களது திருமண உறவு பிரிவை நோக்கி செல்லும்.
ஜூன் :
ஜோதிடத்தின் படி, ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பரிசு, பாராட்டுகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்கள் தங்களது துணைக்கு விசுவாசமாக இருந்தாலும் துணை அதிகமாக பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிறிது மரியாதை குறைவதை கூட விரும்ப மாட்டார்கள். பரஸ்பரம் மற்றும் பணிவு இல்லை என்றால், அதுவும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையை முடிவு செய்து விடுவார்கள்.