காதலை ரகசியமாக வைத்திருக்கும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்.. நீங்க எந்த ராசி?
ஜோதிடத்தின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருப்பார்களாம். அவர்கள் எந்தெந்த ராசியினர் என்று பார்க்கலாம்.
காதல் என்பது ஒர் அழகான உணர்வு..சிலர் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக மற்றவர்களுக்கு தெரிவிப்பார்கள்.. ஆனால் இன்னும் சிலரோ தங்கள் காதலை பற்றி யாருக்கும் கூறாமல் ரகசியமாக தங்கள் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஜோதிடத்தின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருப்பார்களாம். அவர்கள் எந்தெந்த ராசியினர் என்று பார்க்கலாம்.
விருச்சிகம் :
தீவிர ஆர்வம் கொண்டவர்களாக அறியப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் காதல் விஷயத்தை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். இன்னும் சொல்ல போனால் ஆழ்கடலின் ஆழத்தை போல் இவர்கள் மனதில் உள்ளதை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாதாம். தங்கள் காதலை பற்றியும் வெளியே சொல்லவே மாட்டார்களாம். விருச்சிக ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறான விவேகத்துடன் செயல்பட்டால் அவர்களின் மனதில் நிச்சயம் ரகசிய காதல் கதை இருக்குமாம்.
Gemini daily horoscope
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்கள் பன்முக திறன் கொண்டவர்களாகவும் எளிதில் அனைவருடனும் பழகும் குணம் கொண்டவர்கள். ஆனால் காதல் என்று வரும் போது அவர்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளியே சொல்லமாட்டார்களாம். இவர்களின் வசீகர தன்மை மக்களை எளிதில் ஈர்த்தாலும் கூட தங்கள் காதலை ரகசியாமக வைத்திருப்பார்களாம். எனவே காதல் விஷயங்களில் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று தான் பேசுவார்களாம்.
மீனம்:
அதிகமாக கனவுகாணும் மீன ராசிக்காரர்கள் தங்களுக்கு பல செண்டிமெண்ட்களை வைத்திருப்பார்கள். எனவே தங்கள் காதல் விஷயங்களையும் வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளேயே ரகசியமாக வைத்து கனவு காண்பார்களாம். இவர்கள் காதல் பற்றி எந்த ஒரு விஷயமும் அவ்வளவு எளிதில் வெளியே வராதாம்.
Sagittarius
தனுசு :
சாகச மற்றும் புதுமையான அனுபவங்களுக்கு பெயர் போனவர்கள் தனுசு ராசிக்காரர்கள். ஆனால் இவர்கள் காதல் விஷயங்களை வெளியே சொல்லமாட்டார்களாம். இவர்கள் ரகசிய காதல் இவர்களின் உற்சாகம் மற்றும் விருப்பத்தின் பிரதிபலப்பாகவே இருக்குமாம்.
மகரம் :
லட்சிய உணர்வுடன் செயல்படும் மகர ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் இலக்கிலேயே கவனமாக இருப்பார்களாம். ஆனால் இவர்களின் ஆழ் மனதில் ரகசிய காதல் இருக்கும். அதை பற்றி வெளியே யாருக்கும் சொல்லமாட்டார்களாம். மேலும் தங்கள் காதலுக்கும் லட்சியத்திற்கு ஒரு சமநிலையை உருவாக்கி வைத்திருப்பார்களாம்.