- Home
- Astrology
- Rasi Palan 2026: 500 ஆண்டுகளுக்குப் பின் ஜனவரியில் 5 அரிய ராஜயோகங்கள்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.!
Rasi Palan 2026: 500 ஆண்டுகளுக்குப் பின் ஜனவரியில் 5 அரிய ராஜயோகங்கள்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.!
Rasi Palan 2026 in Tamil: ஜனவரி 2026 ஆம் ஆண்டில் 5 அரிய ராஜ யோகங்கள் உருவாகின்றன. இது சில ராசிகளுக்கு சுப பலன்களை அள்ளி வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஜனவரி 2026-ல் உருவாகும் 5 ராஜயோகங்கள்
2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு சில தினங்களே உள்ளன. புத்தாண்டு எப்படி இருக்க போகிறது என்பதை அறிய பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்பட உள்ளது. கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றமானது, அதிர்ஷ்டத்தை அளிக்கும் பல நல்ல யோகங்களை உருவாக்க உள்ளது.
குறிப்பாக ஜனவரி மாதம் மாளவ்ய ராஜயோகம், புதாத்ய ராஜயோகம், சுக்ராத்ய ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம், மங்களாதித்ய ராஜயோகம் ஆகிய ஐந்து ராஜயோகங்கள் உருவாக இருக்கின்றன. இந்த யோகங்களின் செல்வாக்கு சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், நிதி ஆதாயமும், தொழிலில் வெற்றியையும் தர இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
ஜனவரியில் உருவாகும் 5 ராஜயோகங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்க இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். உங்கள் ஆளுமையை மேம்படுத்தவும், வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் உங்களுக்கான அடையாளத்தை நிலைநாட்டவும் ஏற்ற நேரமும், வாய்ப்புகளும் உருவாகும். உங்கள் வேலை அல்லது தொழிலில் புதிய வெற்றிகளும், நேர்மறையான மாற்றங்களும் காணப்படும். உள்நாடு அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும் சனி பகவானின் நிலை காரணமாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் நிகழும் மாற்றங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். தந்தை வழியில் சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பயணங்கள் அல்லது புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கைக்கு கிடைக்கலாம். நிலுவையில் இருந்த சொத்து விவகாரங்கள் சாதகமாகும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன்கள் வசூலாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஐந்து ராஜயோகங்கள் உருவாவது நல்ல பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் எளிதாக முடியும். கடினமான வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் கனவு நனவாகும். உங்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தால் வேலையில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பம் மற்றும் உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு, மன அமைதியை காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களின் எதிர்கால திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்படும்.
துலாம்
இந்த ஐந்து அரிய ராஜயோகங்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்க இருக்கிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக இந்த மாதம் பலனளிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். வீடு அல்லது மனை வாங்கும் கனவு நிறைவேறும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இது பெரிய லாபத்திற்கு வழிகாட்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு சரியான சூழல் உருவாகும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணம் சார்ந்த பேச்சுக்கள் சுமுகமாக முடியும்.
மகரம்
ஜனவரி மாதத்தில் உருவாக இருக்கும் ஐந்து ராஜயோகங்கள் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான காலகட்டத்தை உருவாக்கும். வேலை மற்றும் தொழிலில் இருந்து மந்த நிலை நீங்கி முன்னேற்றம் காணப்படும். உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள், கூட்டாண்மைகளைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் விலகி, பூர்வீக சொத்துக்கள் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கலாம் அல்லது சொத்துக்கள் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

