- Home
- Astrology
- Astrology: அதிக தாய்மை உணர்வு கொண்ட 4 ராசிகள்.! பிறர் கஷ்டப்படுறத இவங்களால சகித்து கொள்ளவே முடியாது.!
Astrology: அதிக தாய்மை உணர்வு கொண்ட 4 ராசிகள்.! பிறர் கஷ்டப்படுறத இவங்களால சகித்து கொள்ளவே முடியாது.!
Zodiac signs with the most maternal feelings: ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் தங்களின் தனித்துவமான குணங்களால், மற்றவர்களுக்கு தாயைப் போன்ற பாதுகாப்பையும், அரவணைப்பையும் வழங்குவார்கள். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக தாய்மை உணர்வு கொண்ட 4 ராசிகள்
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக தாய்மை உணர்வு, கருணை, பாதுகாப்பு மற்றும் அரவணைக்கும் மனப்பான்மையுடன் விளங்குவார்கள். இந்த குணங்கள் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு பாதுகாப்பான உணர்வையும், ஆறுதலையும், தாய்மை உணர்வையும் அளிக்கிறது. தாய்மையின் உன்னத குணங்களைக் கொண்டதாக கருதப்படும் நான்கு ராசிகள் குறித்து இங்கே விரிவாக காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். சந்திரன் உணர்ச்சிகள், கவனிப்பு மற்றும் தாய்மையின் காரகத்துவமாக விளங்குகிறது. கடக ராசிக்காரர்கள் ஜோதிடத்தின்படி தாய்மை உணர்வின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.
தங்கள் அன்புக்குரியவர்களை குடும்ப உறுப்பினர்களாக கருதி அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை அளிப்பார்கள். இவர்களின் அரவணைப்பு மற்றும் கவனிப்பு இயற்கையானது. இவர்களிடம் போலித்தனம் கிடையாது. அன்பு, கருணை, தியாகம் ஆகியவை இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். யாரேனும் சிரமப்படும் பொழுது அல்லது கஷ்டப்படும் பொழுது ஓடோடிச் சென்று ஆறுதல் அளிப்பதில் வல்லவர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள் மற்றும் உறுதியான ஆதரவை வழங்குவதில் சிறந்து விளங்குவார்கள். இவர்களை ஆளும் கிரகம் சுக்கிரன். இது அன்பு, காதல், உறவுகள் மற்றும் ஸ்திரத்தன்மையை குறிக்கிறது. ரிஷப ராசியினர் மிகுந்த உறுதி மற்றும் பொறுமை கொண்டவர்கள். தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பார்கள்.
நேர்மையுடனும், நிதானத்துடனும் அனைவரையும் அணுகுவார்கள். ஒரு கடுமையான சூழலைக் கூட இனிமையாகவும், அழகாகவும் மாற்றி விடுவார்கள். இவர்கள் கொடுக்கும் ஆதரவு யாராலும் அசைக்க முடியாதது. தேவைப்படுபவர்களுக்கு நிலையான மற்றும் நடைமுறை ரீதியான உதவியை அளிப்பதில் இவர்கள் சிறந்தவர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்களை ஆளும் கிரகம் வியாழன் மற்றும் நெட்டியூனாகும். இது கற்பனை, இரக்கம் மற்றும் ஆன்மீகத்தைக் குறிக்கிறது. இவர்கள் எல்லையற்ற இரக்க உணர்வு கொண்டவர்கள். மற்றவர்களின் துயரத்தை ஆழமாக புரிந்து கொள்வார்கள்.
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு ஆறுதல் அளிக்கும் திறன் இவர்களிடம் உள்ளது. ஆழமான உணர்ச்சி பிணைப்பினை உருவாக்க விரும்புவார்கள். பிறரின் துன்பங்களை போக்க தங்களை அர்ப்பணிக்க தயாராக இருப்பார்கள். இவர்களின் கவனிப்பு என்பது மன ரீதியாக ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். இது பகுப்பாய்வு, விவரங்கள் மற்றும் சேவை மனப்பான்மையை குறிக்கும் கிரகமாகும். கன்னி ராசியினர் தாய்மை பாசத்தை வேறு கோணத்தில் காட்டுவார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நடைமுறை ரீதியாகவும், கவனமாகவும், சேவை செய்வதன் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் தேவைகளை கவனிப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். தங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)