- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாரி வாரி வழங்குவதில் வல்லவர்களாம்.! உதவுவதில் கர்ணன் மாதிரி.!
Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாரி வாரி வழங்குவதில் வல்லவர்களாம்.! உதவுவதில் கர்ணன் மாதிரி.!
ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அதிக வள்ளல் தன்மையுடன் விளங்குவார்களாம் யாராவது உதவி கேட்டால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குவார்களாம். அப்படி வள்ளல் குணம் கொண்ட 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வள்ளல் குணம் கொண்ட 4 ராசிகள்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் இயல்பான குணங்களும், தன்மைகளும் உண்டு. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு வகையில் சிறப்பு வாய்ந்தவர்களாக இருப்பார்கள். சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே மிகுந்த கருணையுடனும், தாராள மனப்பான்மையுடனும், சுயநலம் இல்லாமல், மற்றவர்களுக்கு உதவும் குணத்துடனும் விளங்குவார்களாம். யாராவது கஷ்டப்படுவது தெரிந்தாலோ அல்லது கஷ்டப்படுபவர்கள் உதவி கேட்டாலோ எந்த தயக்கமும் இல்லாமல் உதவுவார்களாம். அப்படிப்பட்ட வள்ளல் குணம் கொண்ட நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பாகவே உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் அதிக பரிவு கொண்டவர்கள். இவர்களின் வள்ளல் குணம் என்பது இரக்கம் மற்றும் கவனிப்பு வடிவில் வெளிப்படுகிறது. தங்கள் அன்பானவர்களுக்காக நேரம் ஒதுக்குவது, உணர்ச்சி பூர்வமான ஆதரவு கொடுப்பது மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பை வழங்குவது ஆகியவற்றை தலையாயக் கடமையாக கருதுகின்றனர். ஒருவரின் கஷ்டத்தை பார்த்தால் அதை நீக்க தாமாக முன்வந்து உதவுவார்கள். தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், முன்பின் தெரியாதவர்களுக்கு கூட ஓடிச் சென்று உதவுவார்கள். பிறரின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தங்கள் சொந்த தேவைகளைக் கூட தியாகம் செய்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பிலேயே கம்பீரமானவர்கள் மற்றும் பெரிய இதயம் கொண்டவர்கள். இவர்களின் வள்ளல் குணம் எப்போதும் வெளிப்படையாகவும், ஆடம்பரமாகவும் இருக்கும். இவர்கள் தங்கள் அன்பானவர்களை பரிசுகள், விருதுகள் மற்றும் தாராள அன்பினால் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். பணமாக இருந்தாலும் சரி, நேரமாக இருந்தாலும் சரி அதை பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியே தம் மகிழ்ச்சி என்று நினைக்கிறார்கள். இவர்களின் ஈகை குணம் சமூகத்தில் இவர்களுக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்று தருகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நம்பிக்கை மிக்கவர்கள், சாகச மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் குரு பகவானின் ஆதிக்கத்தின்கீழ் வருகிறார்கள். எனவே இவர்களுக்கு வள்ளல் குணம் இயல்பாகவே உண்டு. இவர்கள் தொண்டு மனப்பான்மை கொண்டவர்களாகவும், பெரிய நோக்கங்களுக்கு நன்கொடைகள் அளிப்பவர்களாகவும் விளங்குகிறார்கள். இவர்களின் உதவி பெரும்பாலும் ஆழமான அறிவு, உற்சாகமான ஊக்கம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றுன் வடிவில் இருக்கும். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கு இவர்கள் ஒருபோதும் யோசிப்பதில்லை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அதிக அக்கறை கொண்டவர்கள் மற்றும் உணர்ச்சிபூர்வமானவர்கள். இவர்கள் தன்னலமற்ற குணம் கொண்டு விளங்குகின்றனர். இவர்கள் மற்றவர்களின் வலியை தங்கள் வலியாகப் பார்க்கும் அளவிற்கு ஆழமான உணர்வுகள் கொண்டவர்கள். இவர்களின் ஈகை குணம் என்பது பொருட்களின் வடிவில் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பு, மன்னிக்கும் குணம் மற்றும் மனப்பூர்வமான உதவி வடிவில் இருக்கும். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவுவதே இவர்களின் குணம். ஒருவருக்கு ஆறுதல் தேவைப்பட்டால் இவர்களைப் போல் யாராலும் ஆதரவை தர முடியாது. இவர்கள் பிறரின் துயரங்களை துடைப்பதை தங்கள் கடமையாக கருதுகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)