MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஸ்ரீராமபிரானுக்கு பிடித்த 4 ராசிக்காரர்கள்.! இவர்களுக்கு சின்ன கஷ்டம் கூட வர மாட்டாராம்.!

Astrology: ஸ்ரீராமபிரானுக்கு பிடித்த 4 ராசிக்காரர்கள்.! இவர்களுக்கு சின்ன கஷ்டம் கூட வர மாட்டாராம்.!

Lord Rama's favorite zodiac signs: இந்து மதத்தில் ஸ்ரீராம்பிரான் முக்கிய கடவுளாக அறியப்படுகிறார். ஜோதிட ரீதியாக அவருக்கு விருப்பமான ராசிகள் சில உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
| Updated : Nov 05 2025, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஸ்ரீராமபிரானுக்கு பிடித்த ராசிகள்
Image Credit : Asianet News

ஸ்ரீராமபிரானுக்கு பிடித்த ராசிகள்

ஸ்ரீ ராமர் ஒழுக்கங்களில் சிறந்த கடவுளாக அறியப்படுகிறார். அவர் தர்மம், நீதி, அன்பு, கடமை, தியாகம் ஆகிய குணங்களை கொண்டுள்ளார். இந்த குணங்களைப் பின்பற்றும் ராசிக்காரர்களுக்கு அவருடைய அருள் சிறப்பாக கிட்டும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தின்படி அவர் பிறந்த ராசி மற்றும் அவருடைய குணங்களுடன் ஒத்துப்போகும் ராசிகளைப் பற்றி இங்கு விரிவாக காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

ராமாயணத்தின் படி கடவுள் ராமர் கடக ராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே கடக ராசி அவருக்கு மிக உகந்த ராசியாக கருதப்படுகிறது. கடக ராசிக்காரர்கள் மிகுந்த பாசமும், கருணையும் நிறைந்தவர்கள். தங்கள் குடும்பத்தினர் மீதும் அன்பு கொண்டவர்கள் மற்றும் ஆழமான பற்று கொண்டவர்கள். இது ராமர் தன் குடும்பம் தம்பிகள் மற்றும் சீதையின் மீது கொண்டிருந்த அன்பை ஒத்திருக்கிறது. ராமர் பிறந்த ராசியாக இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு விஷ்ணுவின் அருள் ஆசியும், ராமரின் காவலும் எப்போதும் கிட்டும் என்று நம்பப்படுகிறது. அவர்கள் சந்திரனின் ஆளுகைக்கு உட்பட்டவர் என்பதால் மனோதிடமும், அமைதியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

35
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் தைரியம், துணிவு, அநீதியைக் கண்டு பொங்குதல் போன்ற குணங்களைக் கொண்டவர்கள். இது அசுரர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய ராமபிரானின் போர் வீரம் மற்றும் தலைமைத்துவ பண்புகளுடன் ஒத்துப் போகிறது. மேஷ ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும், நேர்மையான வழியில் வெற்றியைப் பெற முயற்சிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாக ராமரின் பரிபூரண அருளும் அனுமனின் பாதுகாப்பும் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

45
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான். இந்த ராசிக்காரர்கள் நீதி, சமநிலை, இணக்கம் மற்றும் தர்மம் ஆகியவற்றை நிலை நாட்டுபவர்களாக இருக்கின்றனர். ஸ்ரீ ராமர் ‘மரியாதா புருஷோத்தமர்’ (ஒழுக்கத்தில் சிறந்தவர்) அறம் தவறாத ஆட்சியாளராக இருந்ததால் அவருடைய நீதி உணர்வு, துலாம் ராசியுடன் ஒத்துப்போகிறது. துலாம் ராசிக்காரர்கள் தனிப்பட்ட உறவுகளிலும், சமூகத்திலும் அன்பையும் அறத்தையும் முக்கியமாக கருதுகின்றனர். எனவே இவர்களுக்கு ராமபிரானின் கருணை எப்போதும் உண்டு. வாழ்வில் எந்தவித கஷ்டமும் இன்றி ராமனின் அருளால் காக்கப்படுகின்றனர்.

55
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் ஆன்மீக நாட்டம், கருணை, தியாகம், உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். ராமர் தனது தந்தையின் வாக்கை நிறைவேற்ற அரியணையை துறந்து 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டது, மீன ராசியின் தியாகம் மற்றும் உயர்ந்த நோக்கம் ஆகிய பண்புகளை பிரதிபலிக்கிறது. எனவே ஸ்ரீராமரின் ஆசிகள் மீன ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு. இவர்களுக்கு செல்வம், செழிப்பு, கௌரவம் மற்றும் உயர்ந்த ஞானம் ஆகியவற்றை ராமர் வழங்குவதாக நம்பப்படுகிறது.

ராமர் ஒரு கடவுள் என்பதால் இந்த ராசிகளை மட்டுமே பிடிக்கும் என்று கூறிவிட முடியாது. இது அவரின் பரந்த அருளை குறுக்குவதற்கு சமமாகும். ராமபிரான் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டவர். எந்த ராசியாக இருந்தாலும் தர்மத்தின் வழியில் நடந்து, உண்மையான அன்பையும், கடமையும் கடைப்பிடித்து, பக்தியுடன் வழிபட்டால் ராமரின் முழு அருளும் எப்போதும் கிட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Venus Transit: ஒரே மாதத்தில் 5 கிரக மாற்றங்கள்! நவம்பர் இறுதிக்குள் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
Recommended image2
கோடீஸ்வர யோகத்துடன் தேடி வரும் அதிர்ஷ்டம்.. ராகு – கேது பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு பொற்காலம்..
Recommended image3
Tri Ekadashi Yoga : பிரச்சனைகளை குஜிலிமஸ்து செய்யப்போகும் திரி ஏகாதசி யோகம்... சுக்கிரன் குரு அருளால் பலன் பெறும் 5 ராசிகள்!
Related Stories
Recommended image1
Astrology: விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்.! நவ.16-க்குப் பிறகு ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Recommended image2
Astrology: 1.5 வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நண்பர்கள்.! செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் கோடிகளை சுருட்டப்போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved