MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: சும்மா கில்லி மாதிரி வேலை செய்யும் 3 ராசிகள்.! பதவியும் பணம் இவங்கள தேடி வந்துகிட்டே இருக்குமாம்.!

Astrology: சும்மா கில்லி மாதிரி வேலை செய்யும் 3 ராசிகள்.! பதவியும் பணம் இவங்கள தேடி வந்துகிட்டே இருக்குமாம்.!

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைமைத்துவம், புத்திசாலித்தனம் போன்ற வெற்றிக்குரிய குணங்களைக் கொண்டுள்ளனர். அதிலும் மூன்று ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பு, திட்டமிடும் ஆற்றலால் பதவி, பணம், மற்றும் புகழை எளிதில் ஈர்க்கிறார்கள்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 04 2026, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெற்றிகொடிக்கட்டும் 3 ராசிகள்
Image Credit : Asianet News

வெற்றிகொடிக்கட்டும் 3 ராசிகள்

ஜோதிட  சாஸ்திரத்தின் படியும் ஜாதக அமைப்பின்படியும், ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சிலர் கடினமாக உழைத்து வியர்வை சிந்தி வெற்றியை அடைவார்கள். ஆனால் சில ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைமைத்துவ திறன்கள், புத்திசாலித்தனம், திட்டமிடும் ஆற்றல் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை பெற்றிருப்பார்கள். இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்தால் "சும்மா கில்லி மாதிரி வேலை செய்கிறார்கள்" என்று மற்றவர்கள் வியந்து பாராட்டும் அளவிற்கு திறமையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட 12 ராசிகளில், பதவி, பணம் மற்றும் புகழ் தொடர்ந்து தேடி வரும் 3 ராசிகளைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மகர ராசி - உழைப்பால் உயரும் உத்தமர்கள்
Image Credit : Pixabay

மகர ராசி - உழைப்பால் உயரும் உத்தமர்கள்

மகர ராசிக்காரர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் வாழ்க்கையில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால் அதை அடையும் வரை தொடர்ந்து உழைப்பார்கள். தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் அடைவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய பலமே பொறுமை மற்றும் ஒழுக்கமாகும். அலுவலகம், வியாபாரம் அல்லது அரசியல், சினிமா,  கலை, இலக்கியம் என எந்த துறையில் இருந்தாலும் படிப்படியாக உயர்ந்து முக்கிய பதவிகளை அடையும் வல்லமை இவர்களுக்கு உண்டு. தங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, நடைமுறை சிந்தனையுடன் முடிவெடுப்பதால் பெரிய இழப்புகளை தவிர்க்க முடிகிறது.

பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல, அதை சேமித்து பெருக்குவதிலும் மகர ராசிக்காரர்கள் திறமையானவர்கள். வாழ்க்கையின் ஆரம்பத்தில் சிரமங்களை சந்தித்தாலும், நடுத்தர வயதிற்கு பிறகு செல்வாக்கும் செல்வமும் கணிசமாக அதிகரிக்கும். பதவியும் பட்டமும் இவர்களிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

Related Articles

Related image1
Astrology: பிரச்சினைகளை தீர்க்கும் குருபெயர்ச்சி பரிகாரங்கள்.! எந்த ராசியினர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Related image2
Astrology: உங்கள் வாழ்வில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றங்கள்! சூரியன் - சந்திரன் சேர்க்கையால் யாருக்கு லாபம்?
35
சிம்ம ராசி - எதையும் சாதிக்கும் திறமை
Image Credit : Pixabay

சிம்ம ராசி - எதையும் சாதிக்கும் திறமை

சூரிய பகவானின் ஆட்சியில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையிலேயே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பர். கூட்டத்தில் நின்றாலும் தனியாக தெரியும் சிறப்பு இவர்களுக்கு இருக்கும். லட்சம் பேர் சங்கமிக்கும் இடத்தில் கூட இவர்கள் தனிக்காட்டு ராஜாவாய் தனியாய் தெரிவார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் எந்த வேலை கொடுத்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பார்கள். உடன் இருப்பவர்களை வழிநடத்தும் திறன்  இவர்களிடம் அதிகமாக இருக்கும் என்பதால் நிர்வாகம், அரசியல், தொழில் முனைவு மற்றும் உயர் அதிகாரப் பதவிகளில் சிம்ம ராசிக்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.

புகழும் பதவியும்  செல்வமும் இவர்களை தேடி வருவதற்கு முக்கிய காரணம் இவர்களிடம் இருக்கம் அதீத தன்னம்பிக்கை. சவால்களை கண்டு பயம்கொள்ளாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. அதே சமயம் தங்களின் திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்புகளை சிம்ம ராசிக்காரர்கள்  உருவாக்கிக் கொள்வார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிய கனவுகளுடன் செயல்படுவதால், பணவரவும் சமூக அந்தஸ்தும் தொடர்ந்து உயரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

45
விருச்சிக ராசி
Image Credit : Pixabay

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் மனவலிமையும் திட்டமிடும் திறனும் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். யாராலும் கணிக்க முடியாதபடி இருக்கும்.  இவர்கள் எந்த வேலையையும் மேலோட்டமாக செய்ய மாட்டார்கள். ஆழமாக ஆராய்ந்து, சரியான திட்டத்துடன் செயல்படுவார்கள். அதனால் மற்றவர்கள் தோல்வியடையும் இடங்களில் கூட வெற்றியைப் பெற முடிகிறது.

பண விஷயங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பார்கள். இதனால் முதலீடுகள், தொழில் வளர்ச்சி மற்றும் நீண்டகால திட்டங்களில் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும்.  லாபத்திற்கு மேல் லாபம் இவர்களுக்கு கிடைக்கும் தங்களின் ரகசியமான உழைப்பின் மூலம் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

இவர்கள் ஒருமுறை வெற்றிப் பாதையில் சென்றுவிட்டால், தொடர்ந்து முன்னேற்றம் காண்பார்கள். அதனால் பதவி, அதிகாரம் மற்றும் செல்வாக்கு இவர்களை எளிதில் விட்டு விலகாது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

55
தனிப்பட்ட முயற்சிகளே உண்மையான வெற்றியை தீர்மானிக்கும்
Image Credit : Asianet News

தனிப்பட்ட முயற்சிகளே உண்மையான வெற்றியை தீர்மானிக்கும்

மகரம், சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகிய இந்த மூன்று ராசிகளும் கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையக்கூடிய ராசிகளாக கருதப்படுகின்றன. இருப்பினும் ஜோதிட பலன்கள் பொதுவான கணிப்புகள் மட்டுமே. ஒருவரின் முழுமையான ஜாதகம், கிரக நிலைகள், தசாபுத்தி மற்றும் தனிப்பட்ட முயற்சிகளே உண்மையான வெற்றியை தீர்மானிக்கும் என்பதை மறக்கக்கூடாது.

ஆனால் இந்த 3 ராசிக்காரர்களிடம் இருக்கும் இயல்பான திறமைகள் காரணமாக, பணமும் பதவியும் இவர்களை தேடி வருவது ஆச்சரியமல்ல என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

ஜோதிட ரீதியான இந்த கட்டுரையும் உங்களுக்கு பயனுள்ளதாக இறுக்கும். 

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஏசியாநெட் நியூஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு, சொந்த கார் வாங்கும் யோகம் கிடைக்கும்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Today Rasi Palan: இன்று விபுவன சங்கடஹர சதுர்த்தி.! விநாயகர் அருள் பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள்.!
Recommended image3
Astrology: இனி இவங்களுக்கு ராஜயோகம்! புதன் நட்சத்திரப் பெயர்ச்சியால் அடுத்த 10 நாட்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் 5 ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
Astrology: பிரச்சினைகளை தீர்க்கும் குருபெயர்ச்சி பரிகாரங்கள்.! எந்த ராசியினர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Recommended image2
Astrology: உங்கள் வாழ்வில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றங்கள்! சூரியன் - சந்திரன் சேர்க்கையால் யாருக்கு லாபம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved