- Home
- Astrology
- 2025 ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள் – ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிகள்; இனி துளி கூட கஷ்டம் இல்ல!
2025 ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள் – ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிகள்; இனி துளி கூட கஷ்டம் இல்ல!
2025 Last Four Months Horoscope Predictions in Tamil : 2025 ஆம் ஆண்டின் 8வது மாதம் முடிவடையப்போகிறது, அடுத்த 4 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான பரிசுகளைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள்
2025 Last Four Months Horoscope Predictions in Tamil : 2025 ஆம் ஆண்டின் 8வது மாதம் முடிவடையப்போகிறது, அடுத்த 4 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான பரிசுகளைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த 5 ராசிகள் 2025ல் கிரக நிலைகளின் காரணமாக ஏராளமான பணத்தையும் புகழையும் பெற வாய்ப்புள்ளது.
ரிஷப ராசிக்கான 2025ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள்
2025ஆம் ஆண்டின் மீதமுள்ள காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களின் தொழில் பெரிய அளவில் விரிவடையும். எதிரிகளால் கூட உங்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும்.
மிதுன ராசிக்கான 2025ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள்
2025ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். ஆண்டின் இறுதியில் உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். புதிய சொத்து வாங்க வாய்ப்புள்ளது. வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்ம ராசிக்கான 2025ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள்
சிம்ம ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருப்பார்கள், ஆனால் ஆண்டின் இறுதியில் நிலைமை சீராகும். ஆண்டின் நடுப்பகுதியில் சவால்கள் ஏற்படும், ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க வருமானம் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கு 2025ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள்
துலாம் ராசி 2025ன் மிகவும் சக்திவாய்ந்த ராசியாக இருக்கும். குரு உங்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவார், அதே நேரத்தில் சனியும் ராகுவும் சேர்ந்து உங்களுக்கு வெற்றியைத் தருவார்கள். உங்கள் சொந்த முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் வீட்டிற்கு ஏதோ ஒரு பெரிய நல்ல செய்தி வரும்.
கும்ப ராசிக்கான 2025ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களுக்கான ராசி பலன்கள்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் ஏழரை நாட்டுச் சனி கடைசி கட்டத்தில் உள்ளது, இது நிறைய நன்மைகளைத் தரும். உங்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பொருளாதாரம் மேம்படும். நீங்கள் புதிய தொழிலைத் தொடங்கலாம். உங்கள் உடல்நலம் மற்றும் குழந்தைகளைப் பற்றிக் கவனமாக இருங்கள். இல்லையெனில், இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும்.