மோதிரத்தை கேஜெட்டாக மாற்றி சாம்சங்! வெற லெவல் AI அம்சங்களுடன் 'கேலக்ஸி ரிங்'!
சாம்சங் நிறுவனத்தின் புதுமையான இந்த ஹைடெக் ஸ்மார்ட் மோதிரம் ரூ.5000 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. மூன்று நிறங்களில் ஒன்பது வெவ்வேறு அளவுகளிலும் சாம்சங் கேலக்ஸி ரிங் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிக் என்ற பெயரில் மோதிரத்தையே ஒரு கேஜெடட்டாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த குட்டி கேஜெட்டில் உள்ள அம்சங்கள் டெக்னாலஜி பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்கள், ஸ்மாட் வாட்ச் ஆகியவற்றுடன் ஸ்மார்ட் ரிங் என்ற புதிய கேட்ஜட்டையும் வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி ரிங் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் பிட்னஸ் பேண்டுகளுக்கு மாற்றாக உருவாகியுள்ளது.
இந்த மோதிரம் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. நீரால் பாதிக்கப்படாத வகையில் வாட்டர்ஃப்ரூப் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2.3-3.0 கிராம் மட்டுமே.
கேலக்ஸி ரிங் மோதிரத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உழைக்கும் என்று சாம்சங் உத்தரவாதம் கொடுக்கிறது.
சாம்சங் ஹெல்த் அப்ளிகேஷ் மூலம் இந்த மோதிரத்தை இணைத்து பயன்படுத்தலாம். இது உடல் நிலையை 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேலக்ஸி ரிங் இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா, போதிய அளவு உறங்குகிறோமா, ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என்று கவனித்துக்கொண்டே இருக்கும்.
இந்த மோதிரத்தில் உடல் வெப்பநிலையை உணரும் சென்சாரும் இருக்கிறது. உடலில் உஷ்ணம் அதிகரித்தால் ஹெல்ட் செயலியில் நோட்டிஃபிகேஷன் மூலம் அலர்ட் வந்துவிடும். சாம்சங் ரிங்கில் முக்கியமான இன்னொரு அம்சம் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் Galaxy AI என்ற அம்சம் இந்த மோதிரத்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கிறது.
இந்த மோதிரத்தை தொலைத்துவிட்டாலோ, மறதியாக எங்கேயாவது வைத்துவிட்டாலோ மொபைலில் இருந்து 'Find my ring' என்ற ஆப்ஷன் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். எனவே மோதிரத்தை பத்திரமாக வைத்துக்கொள்வது பற்றியும் கவலை வேண்டாம்.
சாம்சங் நிறுவனத்தின் புதுமையான இந்த ஹைடெக் ஸ்மார்ட் மோதிரம் ரூ.5000 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. மூன்று நிறங்களில் ஒன்பது வெவ்வேறு அளவுகளிலும் சாம்சங் கேலக்ஸி ரிங் கிடைக்கிறது.
போட்டோ, வீடியோவை ஷேர் செய்ய வித்தியாசமான வசதியை வழங்கும் கூகுள் போட்டோஸ்!