Asianet News TamilAsianet News Tamil

ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக வரும் Google Pixel Watch… பிரீமியம் டிசைன் லீக் ஆனது

ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக கூகுள் நிறுவனமும் தனது பிக்சல் வாட்ச்சை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் டிசைன் குறித்த படங்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளன.
 

Google Pixel Watch Retail Box Design Leaked Ahead of Official Launch on October 6
Author
First Published Sep 28, 2022, 1:21 PM IST

சந்தையில் ஆப்பிள் ஐபோனுக்குப் போட்டியாக கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் இருந்துவருகிறது. ஆண்ட்ராய்டு வரிசையில் அதிகபட்ச அம்சங்களுடன், குறிப்பாக கேமரா, பிராசசரில் அதிகபட்ச தரத்துடன் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் 6ம் தேதி “ மேட் பை கூகுள் ” (made by google) நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்பொழுது கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் வாட்ச் ஆகியவற்றை வெளியிடவுள்ளது. ஆப்பிள் ஐ வாட்சிற்கு போட்டியாக கூகுள் நிறுவனமானது அதன் புதிய மாடலான கூகுள் பிக்சல் வாட்சை கொண்டு வருகிறது. இதற்கான 30 நொடிகள் அடங்கிய டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதனை பார்க்கும்பொழுது வாடிக்கையாளர்கள் பல அழகிய வண்ணங்களில் இந்த வாட்சை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.  அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ,ப்ளேக் மற்றும் ரோஸ் கோல்ட் கேஸ்  கொண்ட  வாட்ச்கள் டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளது. இதில் மேலும் பல வகை வாட்ச் பேண்ட் உள்ளன. எடுத்துக்காட்டாக  ஹேசல் லெமோங்கிறஸ்  (எல்லோ / க்ரீன்), சாக் (வைட் /பீச்), சார்கோல் (க்ரே), மற்றும் ஆப்ஸிடியன் ஆகிய பேண்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

முன்னதாகவே இணையத்தில் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை இந்த வாட்ச் அணிந்து செல்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த வாட்சின் ப்ளூட்டூத் / வைஃபை  வெர்ஷனின்  விலையானது 349.99 டாலராக இருக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகின்றது. இது  இந்திய ரூபாயின் மதிப்பில் 27,800 ரூபாயாக உள்ளது. ஆனால் இந்தியாவில்  இதன் விலை மேலும் குறைத்து விற்பனை செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

OnePlus Diwali Sale: மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி! ஆனால்…

தற்பொழுது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ வாட்சானது இந்தியாவில் 45,900  ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த நிலையில் இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமானது அதற்கு போட்டியாக அதனை விட அதிக அம்சங்களை வெளியிட்டு மக்களைக் கவர்ந்து வருகின்றது. குறைந்த விலையில் அதிகம் அம்சங்களுடன் பிக்சல் வாட்ச்கள் இருப்பதால், டெக் விரும்பிகள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios