பிக்சல் போல்டு... இணையத்தில் லீக் ஆன கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்...!
கூகுள் நிறுவனம் தனது டென்சர் சிப்செட் கொண்டு, வன்பொருள் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து இருப்பதை உணர்த்தி இருக்கிறது.
கூகுள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு 12L ஓ.எஸ். வெர்ஷனில் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு என ஏராளமான பிரத்யேக அம்சங்கள் இடம்பெற்று இருந்தன. கூகுள் நிறுவனம் தனது டென்சர் சிப்செட் கொண்டு, வன்பொருள் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து இருப்பதை உணர்த்தி இருக்கிறது. இந்த சிப்செட் கூகுள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிக்சல் போன் மாடல்களில் டென்சார் சிப்செட் வழங்கப்பட்டு இருந்தது.
வெளியீட்டு விவரம்:
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் இணையத்தில் வெளியான தகவல்களில் பிக்சல் போல்டு ஸ்மார்ட்போனை வெளியிடும் திட்டத்தை கூகுள் நிறுவனம் கைவிட்டதாக கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில் புதிய பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று உள்ளது.
அதன்படி கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன், புதிய ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். வெளியீட்டை தொடர்ந்து இந்த ஆண்டு நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் குறியீடுகளில் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு அதற்கான சப்போர்ட் வழங்குவது பற்றிய தகவல்கள் இடம்பெற்று உள்ளது.
பிக்சல் போல்டு எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்த வரை புதிய பிக்சல் போல்டு ஸ்மார்ட்போனில் கூகுள் நிறுவனத்தின் டென்சார் சிப்செட், 12.2MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்படடும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 5.8 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளே மற்றும் அகலமான ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.
கூகுள் பிக்சல் போல்டு மாடலின் விலை ஏற்கனவே வெளியான தகவல்களின் படி 1400 டாலர்களில் இருந்து துவங்கும் என தெரிகிறது. இந்த விலை தற்போது விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 மாடலை விட 400 டாலர்கள் குறைவு ஆகும். மேலும் கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடலை விட 400 டாலர்களும், கூகுள் பிக்சல் 6 மாடலை விட 800 டாலர்கள் வரை அதிகம் ஆகும்.