Asianet News TamilAsianet News Tamil

வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளரை அனுப்ப முடிவு.. பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் பிரபல நடிகை யார்.?

பிக்பாஸ் - சீசன் 5 நிகழ்ச்சியில் முன்கூட்டியே வைல்டு கார்டு மூலம் நடிகை ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

Decided to send a new contestant with a wild card entry .. Who is the famous actress who goes home to Big Boss.?
Author
Chennai, First Published Oct 14, 2021, 9:29 PM IST

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்-சீசன் 5’நிகழ்ச்சி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை 18 பேர் பங்கேற்றனர். முதல் எலிமினேஷன் பிராசஸ் தொடங்குவதற்கு முன்பாகவே திருநங்கை நமீதா மாரிமுத்து, அவசர மருத்துவ காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எலிமினேஷன் நடக்காமலேயே ஒருவர் வெளியேறியதல், தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். Decided to send a new contestant with a wild card entry .. Who is the famous actress who goes home to Big Boss.?
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ற என்ட்ரி இருக்கும். இந்த கார்டு மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு புதிய போட்டியாளர் யாராவது பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவது வழக்கம். தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், வைல்டு கார்டு என்ட்ரியை முன்கூட்டியே அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். அந்த என்ட்ரியில் நடிகை ஒருவரை அனுப்பவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி விரைவில் ‘அங்காடித் தெரு’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலு ஷம்மு அனுப்பி வைக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios