யூ-டியூப்பில் ஆன்லைன் கேம் விளையாட கற்று கொடுப்பதாக கூறி யூ-டியூப்பர் ஒருவர் சிறுவர், சிறுமிகளிடம் மிகவும் ஆபாசமாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து பிரபல தனியார் பள்ளிகளில் மீது அடுத்தடுத்து வைக்கப்பட்டு வரும் பகிர் குற்றச்சாட்டுக்கள் தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது. ஏற்கனவே குழந்தைகளுக்கு ஆன்லைன் இணையதளங்கள் பாதுகாப்பானது அல்ல என்றும், பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் யூ-டியூப்பில் ஆன்லைன் கேம் விளையாட கற்று கொடுப்பதாக கூறி யூ-டியூப்பர் ஒருவர் சிறுவர், சிறுமிகளிடம் மிகவும் ஆபாசமாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு குறித்து விளக்க யூ-டியூப் சேனல் ஒன்றை மதன் என்பவர் தொடங்கினார். டாக்ஸிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனலில் விளையாட்டின் டிப்ஸ், டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதைவிட ஆபாசமான உரையாடல்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன. அதை சில சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வமாக ரசித்திருக்கின்றனர். சமீபத்தில் கெட்ட வார்த்தை பேசாதீர்கள் எனக்கூறிய பெண் ஒருவரை கமெண்டிற்கு, அவரை காதில் கேட்க முடியாத படி ஆபாசமான வார்த்தைகளால் மதன் பேசிய வீடியோ வைரலானது.

சிறுவர், சிறுமிகள் அதிகம் பாலோப் செய்யும் ஒரு சேனலில் இதுபோன்ற படு ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து மதன் பேசிவருவது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. வீடியோ கேமில் மூழ்கி கிடக்கும் இன்றைய தலைமுறை பிள்ளைகள் இதுபோன்ற நபர்களின் வீடியோக்களை பின் தொடர்ந்தால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் கேம் மீது அதிக கவனத்தை திரும்ப வைத்துள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலும் முதல்வர் தனிப்பிரிவிலும் புகாரளிக்கப்பட்டிருக்கின்றன. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
