புதுவை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்தவர் முருகன் (27). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகனின் உறவினர் பெண் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் தோட்டத்தின் வழியாக உள்ளே புகுந்த முருகன் மின் விளக்கை அணைத்து விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய பாய்ந்துள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த பெண் அவரிடம் தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால், இளம்பெண்ணை விடவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து முருகனை மடக்கி பிடித்து தர்ம அடிகொடுத்தனர். பின்னர் அவரை கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.