மதுரையில் தன் தம்பியை கொலை செய்தவரை போட்டு தள்ளிவிட்டு அவரது ரத்தத்தை தம்பி சமாதியில் தெளித்ததோடு அதை வாட்ஸ் குரூப்பில் பதிவிட்டு சகோதரர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் திருப்பாதேச்சி அருகே மாத்தூரை சேர்ந்தவர் பிரசாத். அவர் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய கச்சநத்தம் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் 20 நாட்கள் சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.  

பின்னர், அவர்களது நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கடந்த மார்ச் 18-ம் தேதி மாத்தூர் அருகே வேளங்குளம் கண்மாயில் பிரசாத் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே கிராமத்தைச் 23 வயதான சிவன்மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். 

 

இந்நிலையில், நேற்று காலை சோழவந்தானில் சிவன்மூர்த்தி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மாத்தூரை சேர்ந்தவர்கள் இளைஞர்கள் அணைந்துள்ள வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில் பிரசாத்தின் அண்ணன் ஊர்க்காவலன் ஆடியோ ஒன்றை அனுப்பினார். 

அதில், திட்டமிட்டப்படி முடித்துவிட்டதாக சிவன்மூர்த்தியை கொலை செய்து ரத்தத்தை பிடித்து வந்து தனது தம்பி பிரசாத்தின் நினைவிடத்தில் தெளித்ததாகவும் கூறியுள்ளார். இப்போது தனது தம்பி மகிழ்ச்சியடைந்திருப்பான் என்றும் தான் போலீசில் சரணடைய உள்ளதாகவும் கூறியுள்ளான். சந்தேகம் இருந்தால் தம்பியின் நினைவிடத்தில் சென்று ரத்தக்கறையை பார்த்துக்கொள்ளுமாறு அவர் பேசியுள்ளார். அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த ஆடியோ குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.