கரூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர். 

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கம்மநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பிச்சைமுத்து என்பவரின் மகளை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதுதொடர்பாக பெண் வீட்டாருக்கு தெரிந்ததால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

 

இந்நிலையில் நேற்றிரவு பரமசிவம் வீட்டிற்கு வந்து பிச்சைமுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் பிச்சை முத்துவின் சகோதரர் முருகானந்தம் ஆத்திரத்தில் பரமசிவத்தை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் தடுக்க முயன்ற பரமசிவத்தின் தந்தைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பரமசிவம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனப்பி வைத்தனர். காயமடைந்த பரமசிவத்தின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்து, முருகானந்தத்தையும் தேடி வருகின்றனர்.