திடீரென்று 4 பேர் அரசு மருத்துவமனைக்கு உள்ளே புகுந்து முகிலனை ஓட ஒட விரட்டி  வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முகிலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த நோயாளிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் முகிலன்(22) என்ற இளைஞர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோயில் திருவிழா மோதல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பெரியார் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகனான கூலித்தொழிலாளி கரியன் என்ற முகிலன் (22), அவரது நண்பர் ராஜேஷ் (18) ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது டி.எம்.சி. காலனியை சேர்ந்த 4 பேர் வந்தனர். அவர்கள் முகிலன், ராஜேஷ் ஆகியோரிடம் தகராறு செய்தனர். இதில், முகிலனை முதுகுப்பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வலியால் துடித்த அவரை மீட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து புறநோயாளிகள் பிரிவில் அவருக்கு தையல் போட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

ஓட, ஓட விரட்டி கொலை

அப்போது திடீரென்று 4 பேர் அரசு மருத்துவமனைக்கு உள்ளே புகுந்து முகிலனை ஓட ஒட விரட்டி வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முகிலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த நோயாளிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முகிலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பகாக பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.