ஈரோடு அருகே ஓடைக்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே ஓடைக்குள் பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்ரை ஓடை அமைந்துள்ளது. அந்த வழியாக சென்ற சிலர் எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சற்று தொலைவில் இருசக்கர வாகனம் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அதனை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்த ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்டு இறந்தவர் ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த செல்வகுமார் என அடையாளம் காணப்பட்டது.
அவர் எதற்காக தாராபுரத்துக்கு வந்தார். அவருடன் வேறு யாராவது வந்து கொலை செய்து எரித்து விட்டு தப்பி சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 5, 2019, 4:15 PM IST