எங்க இடத்திலே வந்து இரும்பு கம்பிதிருடுறியா.. கட்டி வைத்து கட்டையால் தாக்கியதால் இளைஞர் பலி.. 8 பேர் கைது.!

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை சத்தியமூர்த்தி அன்ட் கோ என்ற நிறுவனம் கட்டி வருகிறது. 

Youth beaten to death at construction site in Saidapet..8 people Arrest

சைதாப்பேட்டையில் இரும்பு திருடியதாக கூறி இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை சத்தியமூர்த்தி அன்ட் கோ என்ற நிறுவனம் கட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ஷாயின் ஷா காதர் (23), வினோத் (20), ஹேமநாதன் (20) ஆகிய 3 இளைஞர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று இரும்பு கம்பிகளை திருடிக்கொண்டிருந்தனர்.

Youth beaten to death at construction site in Saidapet..8 people Arrest

இதை வேலை செய்து கொண்ட கட்டுமான தொழிலாளர் சிலர் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதனால் இளைஞர் ஹேமநாதன் மட்டும் தப்பினார். ஷாயின்ஷா காதர், வினோத் ஆகியோர் தப்பிக்க முயன்ற போது அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், இருவரையும் கட்டி வைத்து இரும்புகம்பி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். 

Youth beaten to death at construction site in Saidapet..8 people Arrest

இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஷாயின்ஷா காதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக  கட்டிட பொறியாளர்களான உமா மகேஷ்வரன் (33), ஜெயராம் (30), நம்பிராஜ் (29),பாலசுப்பிரமணியன் (29), சக்திவேல் (29), மனோஜ் (21), அஜித் (27), தொழிலாளி சிவபிரகாசம் (22) ஆகிய 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios