கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது சிறுமியான இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் பூவரசன்(24). திருப்பூரில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

சிறுமி பானுவுக்கும் பூவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாண்பர்களாக பழகிய இருவரும் நாளைடைவில் காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் பானுவிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பூவரசன் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். கட்டாயம் கல்யாணம் செய்வதாகவும் கூறியுள்ளார். இதனிடையே பானு கர்ப்பம் தரித்துள்ளார். அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இதனால் சிறுமி பானு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பூவரசனிடம் கேட்டுள்ளார். ஆனால் அதை அவர் மறுத்துவிடவே அதிர்ச்சியடைந்த சிறுமி உறவினர்கள் மூலம் மாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படியில் காவல்துறையினர் பூவரசனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகி இருக்கிறார். இதையடுத்து போக்சோ வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் பூவரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.