ராஜாதி ராஜா படத்தில் ரஜினி தனது மாமன் மகளான நதியாவை கல்யாணம் செய்ய போராடுவார்.  கொள்வதற்காக போராடுவார். ஆனால் அவரது மாமாவான வினுசக்கரவர்த்தி பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து எடுத்துட்டு வந்து காட்டினால் தன்னோட பெண்ணை கல்யாணம் செய்து வைப்பதாக சொல்லி சொல்வார்.ரஜினியும் மாமாவின் சவாலை ஏற்று சம்பாதிக்க செல்வார். 

அதுபோல தற்போது ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சேர்ந்த சௌந்தர பாண்டியன் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று உள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டை நீண்ட நேரமாகப் போராடி உடைத்து செல்லதுரை அவரது கூட்டாளிகளும் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த போய் கதவை திறக்க முயன்று உள்ளனர் ஆனால், பல நேரமாக போராடி  கதவை திறக்க முடியாததால் வீட்டில் இருந்த கடிகாரத்தை ஒரு  எல்இடி டிவி திருடிக்கொண்டு தப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, இருப்பதை உன் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து, போலீசில் அளித்த புகாரில் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் வந்த 3 பேர் வீட்டின் பூட்டை உடைத்தது  காரின் எண்ணை வைத்து  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது செல்லதுரை, மைக்கேல், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சில சுவாரஸ்ய தகவல்கிடைத்துள்ளது. அதாவது இவர்கள் யாருமே  திருடும் பழக்கம் இல்லாதவர்கள். தனது நண்பனின் காதலுக்காக புதிதாக திருட வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ளனர். அதாவது கொள்ளையர்களில் ஒருவன் செல்லதுரை ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அவன் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்ததால் பெண்ணின் அப்பா 10 லட்சம் ரூபாய் பணத்தோடு வந்தால்  தனது பெண்ணை கல்யாணம் செய்து வைப்பதாக சவால் விட்டுள்ளார். தனது மாமனாரின் சவாலை ஏற்ற அந்த இளைஞன் ஒரு பெரிய பங்களா வீட்டில் திருடினால் அந்த பணத்தை சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி சௌந்தரபாண்டியன் வீட்டை கொள்ளையடிக்க முயன்றதும், அவருக்கு இதற்கு முன் திருடிய அனுபவம் இல்லாததால்  பெருசா எதையும் திருடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர் இதில் கொடுமை என்னவென்றால், வெறும் திருடப்பட்ட   80 ரூபாய், 1000 ரூபாய்க்கு டிவியையும் திருடி சிக்கிக் கொண்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவம் விடிய விடிய தொடர்ந்து போராடி சல்லிக்காசுக்கு புரோஜனம் இல்லாத திருட்டை நிகழ்த்தி போலீசில் சிக்கி உள்ளது போலீசாரையே வேதனையில் ஆழ்த்தியுள்ளது.