திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு பகுதியில் நள்ளிரவில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

சென்னை அடுத்த திருவள்ளூர் பெருமாள்பட்டு பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் விக்கி என்கிற விக்னேஸ்வரன் (22). நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் முத்துமாரியம்மன் கோயில் அருகே விக்னேஸ்வரன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், விக்னேஸ்வரனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசார் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விக்னேஸ்வரன் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையான விக்னேஸ்வரனின் நண்பன் இலியாஸ் (23) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் முகம், கை மற்றும் இடது கை கட்டை விரல் ஆகிய பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பினர். 

அதே கும்பல் தான் இந்த கொலையை செய்தியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நள்ளிரவில் வாலிபரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.