சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் திடீரென காணாமல் போனார். இதனால், பயந்துபோன குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. இவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இளம்பெண் மாயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் சுதந்திரபுரம் காலனியை சேர்ந்தவர் சுகன்யா (30). திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் மதியம் திடீரென காணாமல் போனார். இதனால், பயந்துபோன குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காட்டு பகுதியில் சடலம்

இந்நிலையில் நேற்று காலை சிவகங்கை - புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள காட்டு பகுதியில் ஆடைகள் அலங்கோலமாக சுகன்யா உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும்.

போலீஸ் விசாரணை

இதனிடையே சுகன்யாவின் சாவில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காரைக்குடி சாலையில் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.