கள்ளக்காதல் காரணமாக கீழ்க்கட்டளை அபிராமி தனது 2 குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்காதல் காரணமாக சேலத்தில் தனது 3 குழந்தைகளை கொன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், கொழிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 

லட்சுமணன், குமாரமங்களத்தில் உள்ள பேக்டரி ஒன்றில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால், தினமும் சேலத்தில் இருந்து குமாரமங்கலத்துக்கு லட்சுமணன் சென்று வருவார். இதனால் அவர்களுக்கு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், வேலைக்கு சென்ற பிறகு வீட்டுக்கு திரும்பிய லட்சுமணன், வீட்டில் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கலக்கமடைந்த லட்சுமணன், போலீசில் புகார். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று கொழிஞ்சம்பட்டி சாலையில் உள்ள கிணற்றில் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் பிணமாக கிடந்துள்ளனர். உடல்களை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயா மற்றும் 3 குழந்தைகள் இறந்தது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட ஜெயாவுக்கு, ஏற்கனவே வெள்ளைநோய் தாக்கி உள்ளது.

ஜெயாவுக்கு உடலெங்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயா விரக்தியும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஜெயாவிற்கும், வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபருடன் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

 மனைவி, செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பதைக் லட்சுமணன், அவரை கண்டித்துள்ளார். இளைஞருடன் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஜெயா, குழந்தைகளையும் சரிவர கவனிக்கவில்லை. 

இதனால், அவரிடம் இருந்த செல்போனை லட்சுமணன் பிடுங்கிக் கொண்டுள்ளார். இதனால் ஜெயா, பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் செல்போன் வாங்கி பேசி வந்துள்ளார். விஷயம் தெரிந்த அவர்களும் தங்களது செல்போனை தர மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஜெயா, 3 குழந்தைகளையுமே கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின்னர், தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அவர் கூறினார்.

கள்ளக்காதல் விவகாரத்தால், கீழ்க்கட்டளை அபிராமி தனது இரண்டு குழந்கைளை கொன்ற நிலையில், ஜெயா தனது மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.