தோசைக்கு சட்னி  தயார் செய்யாததால் கண்வன் திட்டிய ஆத்திரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பாகூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ்.  அவரது மனைவி சந்தானலட்சுமி சார்காசிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  இந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். சந்தானலட்சுமி 

கடந்த புதன்கிழமை மாலை சந்தானலட்சுமி வேலை முடிந்து வீடு திரும்பி இரவு உணவுக்காக தோசை தயார் செய்தார். அப்போது வெளியே சென்றுவிட்டு வந்த ரமேஷ், சட்னி வைக்காமல் ஏன் தோசை சுடுகிறாய்? என்று கேட்டுள்ளார்.  இதனால் அவர்களுக்குள் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. 

இதில் மனம் உடைந்த சந்தானலட்சுமி வீட்டை  உட்புறமாக பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த ரமேஷ் கதவை உடைத்து பார்த்தபோது சந்தானலட்சுமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மனைவியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்தானலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.  சட்னிக்காக தகராறு ஏற்பட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.