ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண்ணை சீரழித்த சிறை வார்டன்கள்.!
சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை காதலிப்பாக ஆசை வார்த்தை சிறை வார்டன் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை காவலர்கள் குடியிருப்புக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.
இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த 2 சிறை வார்டன்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை காதலிப்பாக ஆசை வார்த்தை சிறை வார்டன் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை காவலர்கள் குடியிருப்புக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். அவருடன் சேர்ந்து மற்றொரு வார்டனும் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதை வீடியோ, போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி அந்த பெண்ணை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இளம்பெண் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அருண் (30) மற்றும் சிவசங்கர் (31)இருவரையும் கைது செய்தனர்.
கைதான அருண், சிவசங்கர் ஆகியோர் உடனடியாக சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால், கைது செய்யப்பட்ட விவரம் குறித்து, சேலம் மத்திய சிறை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.