பள்ளியில் காதல்.! கல்லூரியில் மோதல்.. கழற்றி விட்ட காதலி.! தண்ணீர் தொட்டியில் சமாதி கட்டிய கொடூர காதலன்.!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்துள்ள எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய 2வது மகள் விசித்ரா (23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு விசித்ரா வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் விசித்ராவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

young woman murder case... boyfriend Arrest tvk

குடிநீர் தொட்டியில் இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்துள்ள எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய 2வது மகள் விசித்ரா (23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு விசித்ரா வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் விசித்ராவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விசித்ராவை திடீரென காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். 

இதையும் படிங்க;- அண்ணியை கரெக்ட் செய்த கொழுந்தன்.. உல்லாசத்துக்காக அண்ணணை போட்டு தள்ளிவிட்டு நாடகம்.. தம்பி சிக்கியது எப்படி?

அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு விசித்ரா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்த கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயசீலனும், விசித்ராவும் எடக்காடு பள்ளியில் ஒன்றாக படித்தனர். அப்போது அறிமுகம் ஏற்பட்டுள்ளது. விசித்ரா கல்லூரிக்கு சென்ற போது, இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் ஜெயசீலன் நடவடிக்கை சரியில்லாததால் விசித்ராவுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஜெயசீலனுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் விசித்ராவுக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.  

இதையும் படிங்க;-  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. தாயின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?

இந்த தகவல் அறிந்த ஜெயசீலன் ஆத்திரத்தில் நேரில் வந்து தனியாக பேச வேண்டும் கூறி விசித்ராவை அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஜெசீலன் கயிற்றால் விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், ஜெயசீலன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios