புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த உதயகுமார் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உதயகுமார் வீட்டருகே உள்ள அவரது உறவு பெண்ணிடம் அவர் சகஜமாக பேசி பழகினார்.

இதில் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ஐ லவ்யூ, நான் எப்படியும் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று ஏமாற்றி அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார். இதில் அந்த இளம்பெண் கர்ப்பிணியானார். இந்த விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என்று உதயகுமார் சொன்னதால், அந்த இளம்பெண்ணும் கர்ப்பிணியான விஷயத்தை வெளியே கூறவில்லை. 

சமீபத்தில் அந்த இளம் பெண்ணுக்கு வயிற்று பயங்கர வலி ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர். டாக்டரிடம் அழைத்து சென்றனர். அப்போது அவரை  பரிசோதித்து டாக்டர்  மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் மகளிடம் விசாரித்தனர். அப்போது உதயகுமார் கல்யாண ஆசை வார்த்தை காட்டி  ஏமாற்றி கற்பழித்துள்ளார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, அந்த பெண் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உதயகுமார் அந்த இளம்பெண்ணை கற்பழித்து, 8 மாத கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.  உடனடியாக  விரைந்து வந்த போலீசார் உதயகுமாரை கைது செய்தார்கள். இந்நிலையில் 8 மாத கர்ப்பமாக உள்ளதாகவும்,  மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.