தேனி அருகே திருமணமான 7 மாதத்தில் கள்ளக்காதலியுடன் மகன் ஓட்டம் பிடித்ததால் அசிங்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள தம்மிநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி பத்மாவதி (50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மற்றொரு மகளுக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். 

இந்நிலையில், திருமணமான முதல் மகனுக்கு சில மாதங்களாக ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக தாய் பலமுறை மகனை கண்டித்துள்ளார். ஆனால், திடீரென கள்ளக்காதலியுடன் அவர் மாயமாகிவிட்டார். எனவே பெண் வீட்டார் பத்மாவதியை தொடர்ந்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த பத்மாவதி சம்பவத்தன்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.