கர்ப்பமான காதலி, ஜெயிலில் தள்ளியதால் விரக்கியில் இளைஞர் ஒருவர் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.

சேலம், பள்ளப்பட்டி, ராமநேசன் நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபி,   வரும் வருமானத்தை நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து செலவழித்து வந்தார். மாதத்தில் பாதி நாட்கள் தான் வேலைக்கு செல்வார். மீதமுள்ள நாட்கள் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நேற்று இரவு கோபி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறையில் தூங்கினார். இன்று காலையில் வெகு நேரமாகியும் அறை கதவை திறக்கவில்லை. இதனால் உறவினர்கள் கதவை திறக்குமாறு கூறி தொடர்ந்து தட்டினர்.

கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர்கள், பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, கோபி தூக்கில் தொங்கினார். விசாரித்ததில் அவர், தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவர் எதற்காக? தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தியதியல் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அதில், கோபிக்கும், அதே பகுதியை சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி கோபி, நிர்மலாவை காதலிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினார். இந்த காதலை அந்த பெண் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து இருவரும் பல்வேலு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி, கோபி, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார் இதனால் அந்த பெண் அவர் கர்ப்பம் ஆனார்.

இதையறிந்த கோபி, தனது காதலியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஏமாற்றி கர்ப்பத்தை கலைத்து விட்டார். பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த நிர்மலா தன்னுடைய வாழ்க்கையை சீரழித்த கோபி மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் கோபி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த வந்த அவர், விரக்கியில் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.