மனசு மாறிய கள்ளக்காதலி கணவருடன் சென்றதால் விரக்தி அடைந்த கள்ளக்காதலனான சமையல் மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசப்பட்டு பகுதியை சேர்ந்த வீரய்யன். இவரது மகன் யோகேஷ்  கோவை சுக்ரவார்ப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை பார்த்து வந்தார். யோகேசுக்கும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 23 வயது கல்யாணமான  இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதல் எற்பட்டது. வீரைய்யன் ஊருக்கு வரும்போதெல்லாம் அந்த பெண்ணின் கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஆனால்,  இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவர் வீட்டிற்கும் தெரியவரவே ஊரைவிட்டு ஓடிப்போக பிளான் போட்டுள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் அந்த பெண்ணை கோவைக்கு யோகேஷ் அழைத்து  வந்து அந்த பெண்ணுடன் கடந்த உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இருவரும் கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவி, குழந்தை கோவையில் இருப்பதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கோவைக்கு வந்து மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், கணவன் கெஞ்சிக்கேட்டதால் மனசு மாறிய அந்த பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு கணவருடன் ஊருக்கு சென்றுவிட்டார்.

இதனால் விரக்தியடைந்த கள்ளக்காதலன் யோகேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.