ஆசிரியை வீட்டில் அறையில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து மிரட்டிய காதலன் மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி டவுன்ஹால் ரோட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தீபலட்சுமி, கணித ஆசிரியையாக புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வரும் இவர், இன்று காலை அவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 

அந்த கோரிக்கை மனுவில்;  எனது அம்மா அப்பா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய அக்காவிற்கு திருமணமாகி அவர் புதுக் கோட்டையில் தனது கணவருடன் வசித்து வருகிறார். நான் முதலில் திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வந்தேன். அப்போது கோட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தேன். அங்கு இருந்த போது அடிக்கடி மலைக்கோட்டை கோவிலுக்கு செல்வேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த டெக்கரேட்டர்ஸ் தொழில் செய்து வரும் வாலிபர் ரமேஷ்  ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர் என்னை டவுன்ஹால் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் என்னை தங்க வைத்தார். அதேபோல என்னை கல்யாணம் செய்து கொள்வதாகவும் சத்தியம் செய்தார்.

திடீரென ஒருநாள் எனது வீட்டின் ஜன்னலில் சிறியதாக கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்து நான் அதிர்ந்து போனேன். இது பற்றி எனது காதலன் ரமேஷிடம் கேட்ட போது, உன்னை நான் முழுமையாக  படம் பிடித்துள்ளேன். நீ திருமணம் செய்து கொள்ள என்னை கெஞ்ச வேண்டும் என்று கூறினார்.

அவ்வாறு பண்ணலேன்னா உன்னை கேமராவில் படம் பிடித்த மொத்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை சமூக வலை தளங்களில் வெளியியிட்டுவிடுவேன் என மிரட்டினார். இதுபற்றி நான் கோட்டை போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார்  விசாரணை எதுவும் நடத்தவில்லை. எனவே கலெக்டர் உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனு மீது உரிய நடவடிக்கை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டை போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.