திருமணமான பெண்ணை நைசாக பேசி ஏமாற்றி கற்பழித்து அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் ஆனந்தகிரி பகுதியில் மின்சாதன கடை நடத்தி வந்துள்ளார். அதே பகுதியில் கவரிங் நகை கடையில் வேலை பார்த்த வந்த திருமணமான பெண் ரோஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கல்லாக காதலாக மாறியுள்ளது. 

அப்போது சசிக்குமார் அந்த பெண்ணிடம் பலமுறை தனது சொந்த தேவைக்காக பணத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் சசிக்குமார் அந்த பெண்ணிடம் வாங்கிய பணம் எதுவும் தராத நிலையில், அந்த பெண்ணை வத்தலகுண்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு சசிக்குமார் அழைத்துள்ளார். இதனால் அந்த பெண் சசிக்குமாரிடம் பணத்தை வாங்க வத்தலகுண்டுக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் சசிக்குமார் அந்த பெண்ணை விடுதி ஒன்றிற்கு வரவழைத்து, அவரிடம் நைசாக பேசி கற்பழித்துள்ளார். அதுமட்டுமல்ல அப்படி கற்பழித்ததும்  அதை வீடியோ, போட்டோ எடுத்து  மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரோஜா, தன்னை கற்பழித்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சசிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பதிக்கப்பட்ட பெண் ரோஜாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.