விருதுநகரில் இரவில் வீடுபுகுந்து சுந்தரமூர்த்தி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிராமத்தில் சுந்தரமூர்த்தியின் மனைவிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மனைவிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஈஸ்வரன் என்னோட மனைவியை நீ எப்படி தகாத வார்த்தையால் வசைப்படுவாய் என்று சுந்தரமூர்த்தியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். 

பிறகு உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரவில் ஈஸ்வரன் தனது நண்பர்களுடன் குடிபோதையில் சுந்தரமூர்த்தியின் வீட்டுக்கு நுழைந்துள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஈஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை, கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதில் நிலைகுலைந்து சுந்தரமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.