தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பணவெளி அருகே வெட்டாற்றின் தென்கரையில் புதன்கிழமை காலை 8 மணிக்கு ஓர் இளைஞரின் சடலம் கிடைப்பதாக நடுக்காவேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது,  கை மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் ஓர் இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசாரின் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு,  விசாரணையை தொடங்கியது, முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருவையாறு மணலூரைச் சேர்ந்த  பிரசாந்த் என்பது தெரியவந்துள்ளது

பிரசாந்தின் சகோதரி மற்றும் மணலூரைச்சேர்ந்த  பொதுமக்களிடம் விசாரிக்கையில் காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று அம்பலமாகியுள்ளது.

அவர்கள் போலீசாரிடம் கூறிய தகவல்கள் அண்ணா வாங்க பார்க்கலாம்;  23 வயதான பிரஷாந்த் சொல்லி முடித்துவிட்டு சென்ட்ரிங் பெயிண்டிங் என பல  வேலைகள் செய்து வந்துள்ளார்.

மணலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 17 வயது சிறுமியும் பிரசாந்தும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டுத் தரப்பில் உங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த எட்டாம் தேதி இரவு காதலன் பிரசாந்த் வீட்டிற்கு அந்த சிறுமி வந்ததாக வந்துள்ளார். தகவல் கசிந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால், தனது காதலியை அழைத்துக்கொண்டு ஜெயங்கொண்டத்தில் அன்றிரவே சென்றுள்ளார்.

மறுநாள் காலை பிரசாந்தின் தாய் அண்ணன் அண்ணி தங்கை ஆகியோர் ஜெயம் கொண்டதற்கு சென்றுள்ளனர் அங்கு குடும்பத்தினர் முன்னிலையில் பிரசாந்த் தனது காதலி கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதற்கிடையே சிறுமியை காணவில்லை என அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர். திருமணம் முடிந்தவுடன் தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை அந்த சிறுமி தனது  தாயிடம் சொல்லி உள்ளார். 

ஆத்திரத்தில் இருந்த சிறுமியின் வீட்டார் அவரை கருவியாக வைத்து பிரசாந்தை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி  வீட்டுக்கு வரும்படியும் பெரியவர்களுடன் கலந்து பேசி முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக  திட்டமிட்டுள்ளனர்.

அதை நம்பிய சிறுமியும் தனது கணவனான பிரசாத்திடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரசாந்த் இதை ஏற்றுக்கொள்ளவில்லை, இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரசாந்த் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இந்த தகவலை அறிந்த சிறுமியின் குடும்பத்தார் சமயபுரம் சென்று பிரஷாந்த் குடும்பத்தோடு  சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பின்னர் சிறுமியை தனது வீட்டுக்கு தனியாக அனுப்பி உள்ளனர். பிரசாந்தின் குடும்பத்தினரையும் தனியாக பிரித்து மற்றொரு காரில் அழைத்து சென்றுள்ளனர்.  பிரசாந்தை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு, மது அருந்த வருவதாக அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பணவெளி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பிரசாந்தின் வாய், கையில் துணியை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார் பிரசாந்தின் சகோதரி.

மேலும் பேசிய பிரசாந்தின் சகோதரி குடும்பத்தை தனியாக அனுப்பிவைத்த குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்ற  தெரியவில்லை என சொல்லிறார்.  பிரஷாந்த் கொலை செய்யப்பட நிலையில் அவரது குடும்பம் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை.