கீரிப்பாறை பகுதியை சேர்ந்த 34 வயது இளம்பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் கேரளாவில் தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவு தனது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அங்கு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் இளம் பெண்ணை உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வாலிபரை அசிங்கமாக திட்டியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபரும்  அந்த பெண்ணை ஆபாசமாக பேசி திட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து, இளம்பெண் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயண பிள்ளை மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தது அதே பகுதியை சேர்ந்த அதாவது பக்கத்து வீட்டு ஜெயக்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


திருவாரூர்; திருவாரூர் பெரியமகாபுரத்தை சேர்ந்தவர் வினோத்ராஜ் மனைவி ரஞ்சனி, இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. காப்பனாமங்கலத்தில் உள்ள வீட்டில் 2 பேரும் வசித்து வந்தனர். ரஞ்சனி கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரஞ்சனியை பிரிந்து வினோத் பெரிய மகாபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் ரஞ்சனி தனது கணவரிடம் வாருங்கள், நாம் சேர்ந்து வாழலாம் என கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த வினோத் மற்றும் அவரது தாய் சகாயமேரி 2 பேரும் சேர்ந்து ரஞ்சனியை சரமாரியாக தாக்கி எட்டி உதைத்தனர். இதில் ரஞ்சனிக்கு காயம் ஏற்பட்டு கர்ப்பம் கலைந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து வினோத், சகாயமேரியை விசாரித்து வருகின்றனர்.