நள்ளிரவில் அசோக்குமார் என்ற தொழிலாளி கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட நிலையில் கள்ளத்தொடர்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நள்ளிரவில் அசோக்குமார் என்ற தொழிலாளி கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட நிலையில் கள்ளத்தொடர்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆவடி அருகே கோயில்பதாகை, வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் கட்டிட தொழிலாளி. இவரது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இதன் பிறகு, இவரை பாட்டி வளர்த்து வந்துள்ளார். அசோக்குமாரின் தம்பி கார்த்திக் இதே பகுதி டேங்க் தெருவில் தனியாக வசித்து வருகிறார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அசோக்குமார் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார் சுமார் 11.45 மணியளவில் இவரது வீட்டுக்கு வந்த 3 பேர், உருட்டு கட்டையால் துடிக்க துடிக்க தாக்கி, முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.  அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த போலீஸ் அசோக்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட அசோக்குமாருக்கு 3 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதே பகுதியில் வசித்து வந்த திருமணமான பெண்ணுடன் அசோக்குமாருக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்க்கே சென்று உல்லாசமாக இருந்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அசோக்குமார் வந்து போவதை அறிந்த, அந்த பெண்ணின் கணவர் அசோக்குமாரை கண்டித்துள்ளார். 

ஆனாலும்  போதிலும், அவரும் அந்த பெண்ணும் தகாத உறவை தொடர்ந்து வைத்துக்கொண்டனர். இதனையடுத்து, அவர் வீட்டை காலி செய்து விட்டு பெண்ணுடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று விட்டார். இதன் பிறகும், கூட அசோக்குமார், செல்போனில் அந்த பெண்ணுடன் ரொமான்ஸ் செய்து வந்துள்ளார். மேலும், கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட அந்த பெண்ணிடம் போனில் கொஞ்சி பேசியது தெரியவந்துள்ளது.