சிவகாசியில் குடிபோதையில் நண்பர்கள் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டியைச் சேர்ந்த காளிசாமி மகன் நாமகோடி ஈஸ்வரன். பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர்கள் சித்துராஜபுரம் மூர்த்தி, முத்துராமலிங்கபுரம் ராமர், தேவர்குளம் மாரீஸ்வரன். 3 பேரும் கூலித்தொழிலாளிகள். 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள லட்சம் தியேட்டர் பின்புறத்தில் உள்ள காலியிடத்தில் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு சரக்கு அடித்துள்ளனர்.

அப்போது நண்பர்கள் குடி போதையில் பேச்சு வார்த்தையில் நடந்த  வாக்குவாதத்தில் ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மூர்த்தி, ராமர், மாரீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து அருகில் கிடந்த பாறாங்கல்லை தூக்கி நாமகோடி ஈஸ்வரனின் தலையில் போட்டனர். இதில், வலி தாங்க முடியாமல் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பா இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி டவுன் போலீசார்  வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்கள் மூவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.