கல்லூரி மாணவியோடு உல்லாசமாக இருந்து, செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட அவனது நண்பர்கள் 2  செய்த சம்பவம் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம், குளக்கரை 2வது தெருவை சேர்ந்தவர் கமல் நாத், தனியார் பொறியியல் கல்லூரியில்  2ம் ஆண்டு  படித்து வருகிறார். இவர், பள்ளி பருவம் முதல் தன்னுடன்  ஒன்றாக படித்து வந்த  மடிப்பாக்கத்தை சேர்ந்த, தற்போது மற்றொரு கல்லூரியில் படித்துவரும் பிரேமாவை (பெயர் மாற்றம்)  காதலித்து வந்தார். 

இந்நிலையில்,  திருமண ஆசை காட்டி, மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலமுறை உல்லாசமாக  இருந்துள்ளார். இதனை, சக கல்லூரி நண்பரான வேளச்சேரி காந்தி சாலை கிழக்கு மாடவீதியை சேர்ந்த யோகேஷ் என்பவர் மூலம் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர், மாணவியிடம் அந்த படத்தை  காட்டி, தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வரும்படியும், மீறினால் அந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமல்ல பணம் கேட்டும் அச்சுறுத்தி  வந்துள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி நடந்த சம்பவத்தை  தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை  கொடுத்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிந்து  விசாரணை நடத்தினர். 

அதில், மாணவியை செல்போனில் வீடியோ எடுத்து  மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து மாணவியின் காதலன் கமல் நாத் மற்றும் செல்போனில் வீடியோ எடுத்த யோகேஷ் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.