சென்னிமலையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளம்பெண் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயுடன் வசித்து வந்த அவருக்கு, மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதன்படி, சென்னிமலை காந்திஜி வீதியை சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யும் சாமியப்பனின் மகன் ரகுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணும், ரகுவும் பரஸ்பரம் செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டு பேசி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, தனது தாய் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு ரகு வந்ததாகவும், அப்போது தன்னைத் தவிர வீட்டில் யாரும் இல்லாததால், அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

இது ஒருமுறை மட்டுமல்ல, மீண்டும், மீண்டும் மிரட்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து கருக்கலைப்பு மாத்திரையை ரகு வாங்கிக் கொடுத்துள்ளாராம். ரகுவின் வீட்டில் இதைச் சொன்ன உடன் தங்களது திருமணத்தையும் நிறுத்தி விட்டார்களாம்.

இதனைத் தொடர்ந்து ரகுவையும், ரகுவின் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து 
ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ரகு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து  ஜீவிதா கூறியதாவது;  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜீவிதாவின் தாயார் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த ரகு, ஏன் அம்மா வீட்டில் இல்லாத தை தெரிந்து கொண்ட அவர், தனிமையில் இருப்பதை பயன்படுத்தி பலாத்காரம் செய்தார். நானும் அழுதேன்... அதற்க்கு சம்மதிக்கவில்லை திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்தார். அதன் பின் என்னை பலாத்காரம் செய்தார்.

ஆனாலும்  ரகு அத்துமீறியது குறித்து நான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை, வெளியில் கூற வேண்டாம் என்றார். காரணம் ரகு கூறிய அந்த உறுதி வார்த்தைகள். ஆண் இல்லாத வீடு என்பதால், அலட்சியமாக ஏமாற்ற முயற்சிக்கிறார், வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ரகுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. தந்தை இல்லாத பெண் என்பதால் அலட்சியம்..? ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் நீதிமன்றத்தை மட்டுமே நம்பி உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜீவிதாவின் அம்மா; திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். அவள் கர்ப்பமானதை என்னிடம் கூட சொல்லவில்லை,
இந்த விஷயம் தெரிந்ததும் நான் அழுதேன்... ரகுவை நம்புமாறு மகள் கூறினாள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட ரகு, தனது அத்துமீறலை தொடர்ந்துள்ளார்.பல முறை பலாத்காரம் செய்தார். 

இதனையடுத்து என்னை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என மிரட்டினார். இந்நிலையில், திடீரென ரகுவிற்கு வேறு ஒரு இடத்தில் அதிக சொத்துடன் வரன் கிடைக்க, வார்த்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வசதி அதிகமாக இருப்பதால் வேறொரு பெண்ணுடன் நிச்சயம், செய்துள்ளார்கள். இதை கேட்டதால், எங்களை ரகுவின் பெற்றோர் மிகவும் தரக்குறைவாக பேசினார்கள்.

தனி ஒரு பெண்ணாக தன் மகளை பொறியியல் பட்டதாரியாக உயர்த்தி, நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்து அழகு பார்க்க எண்ணிய ஒரு அம்மாவை, ஜவுளி கடை தொழிலதிபர் சாமியப்பன் குடும்பமும், அவரது மகன் ஒரு பெண்ணை இப்படி சீரழித்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.