கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், கல்யாணம் ஆனவர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி அவர்களின் வாழ்வை சீரழித்த காமக்கொடூரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளது போலீசாரையே அதிரவைத்துள்ளது.

தாய் தந்தை இல்லாத  இளம் பெண்களை மேட்ரிமோனி இணையதளம் மூலம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை உல்லாசவாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சென்னையில் போலியான கம்பெனி ஒன்றை ஆரம்பித்து, ஜஸ்ட் டயல் மூலம் சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களில் பல பேரை தனது காம பசிக்கு இரையாக்கிய தீனதயாளன், தனது ஆசைக்கு இணங்க மறுக்கும் இளம் பெண்களை மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிறகு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்; நொச்சிப்பாளையம் தான் என்னுடைய சொந்த ஊர், நான் 7ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன், பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் போதே, பெண்களை ஏமாற்றி ஜாலியாக இருக்கலாம் என்ற ஐடியா பண்ணி தான் வந்தேன். அதனால அவர்களிடம் நெருங்கி பழங்கி கல்யாண ஆசை காட்டினேன்.அவர்களை சீரழித்தேன், அப்பவும் என்னால சொகுசான வாழக்கை வாழ முடியல, அதனால, ஃபேஸ்புக்கில் போலீஸ் எஸ்ஐ. யூனிபார்ம் போட்டு என் போட்டோக்களை போட்டேன். அப்பதான் நிறைய பெண்கள் என்னிடம் நெருங்கி பேசினார்கள், அவர்களையும் ஏமாற்றி உல்லாசமாக இருந்தேன். 

இதைதவிர, மேட்ரிமோனியல் மூலமாகவும் கிடைத்த பெண்களை கல்யாணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பலமுறை உல்லாசம் அனுபவித்தேன். என்னிடம் பழகும் பெண்களுக்கு முதலில் கல்யாண ஆசைதான் காட்டுவேன். மொத்தம் 4 நாள் அவர்களுடன் குடியிருப்பேன். அப்பறம் ஜாலியா இருக்கும் போது எடுத்த வீடியோவை அவர்களிடம் காட்டியதும் அவர்கள் பயந்து போய் விடுவார்கள்,  பிறகு மெல்ல தப்பித்து விடுவேன், இப்படி பெண்களை ஏமாற்றி, பணம் பறித்தே நிதி நிறுவனம் தொடங்கினேன். 

அதிலும் மோசடி செய்து சுமார் 30 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றினேன். அங்கே வேலை செய்கிற பெண்களையும் ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். இப்படியே மொத்தம் 24 பெண்களை என் வீட்டுக்கு காரில் கடத்தி வந்து அவர்களை பலவந்தமாக கற்பழித்துள்ளேன். எனக்கு நானே ஸ்ரீராமகுரு, தீனதயாளன் என பெயர்களை சொல்லி 6 பெண்களை கல்யாணம் செய்துள்ளேன் என்றார்.