முதல் இரண்டு மனைவியை ஏமாற்றிவிட்டு, மூன்றாவதாக எதிர் வீட்டு இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி லாட்ஜில் ரூம் எடுத்து உல்லாச வாழ்க்கை நடத்தியவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கரிச்சான்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளியான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்த தனது மாமன் மகள்களான தென்னரசி, அவரது தங்கை தாமரைச்செல்வி ஆகிய இருவரையும் கல்யாணம் செய்து கொண்டார்.

இதில் கரிச்சான்குண்டு கிராமத்தில் முதல் மனைவி தனது மகளுடனும், பனைக் குளத்தில் 2-வது மனைவி மகனுடனும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கரிச்சான் குண்டு கிராமத்தில் உள்ள முதல் மனைவி வீட்டில் தங்கினார். அந்த வீட்டின் எதிரில் பாண்டியின் அக்காள் தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார்.

அப்போது பாண்டி அடிக்கடி அக்காள் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அங்கு அக்காளின் 16 வயதுடைய மூத்த மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அந்த பெண்ணுடன் பேசி பழகி வந்தார். அவரிடம் ஆசை ஆசைவார்த்தை கூறி காதல் வலை வீசியுள்ளார். இதனையடுத்து செல்போன் நம்பர் வாங்கி அதிலும் தனது லவ் மெஸேஜ் அனுப்பி வந்துள்ளார். அப்போது நாம் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என அந்த சிறுமியை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

பாண்டிக்கு 2 பெண்டாட்டிக்காரர் என தெரிந்தும் பாண்டி பேசிய ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த சிறுமி கடந்த 31-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென பாண்டியோடு ஓடிப்போனார்.  இதனால் பதட்டம் அடைந்த அவரது தாயார் மகளை பல்வேறு இடங்களில் தேடினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் பாண்டியும் தனது முதல் மனைவியின் மகள், 2-வது மனைவியின் மகனுடன் மாயமாகி இருந்தார். இது முதல் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது உதவியின் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பாண்டியின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்ததில் அவர், தஞ்சாவூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு அந்த சிறுமி, மகன் மற்றும் மகளுடன் இருந்த பாண்டியை போலீசார் கைது செய்தனர்.மேலும் மீட்கப்பட்ட அந்த சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 2 குழந்தைகளும் அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவத்தன்று பாண்டி அந்த சிறுமியையும், துணைக்கு  தனது குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். நேராக பழனிக்கு சென்ற அவர்கள் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தஞ்சாவூருக்கு சென்ற அவர்கள் அங்குள்ள லாட்ஜில் தங்கி குடும்பம் நடத்தியதும், அங்கிருந்துகொண்டே  பாண்டி திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

குழந்தைகளுடன் சென்றால்தான் யாருக்கும் சந்தேகம் வராது. மேலும் தங்குவதற்கு வீடும் கிடைக்கும் என கருதி 2 குழந்தைகளையும் பாண்டி அழைத்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 16 வயதுடைய சின்ன பெண்ணை ஆசைவார்த்தை கூறி கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திய பாண்டியை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.