தனது காதலி என நினைத்து வேறொறு பெண்ணை பெண்ணை கோபத்தில் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தை சேர்ந்த  இளம்பெண் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு தோட்டத்து பாதையில் கவுந்தப்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை தாக்கி கீழே தள்ளி கன்னத்தில் பளார் பளார் என அடித்துள்ளார்.

அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர் அக்கம் பக்கத்தினர். உடனே சுதாரித்துக்கொண்ட வாலிபர் பைக்கை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இளம் பெண்ணை மர்மநபர் கண்ணாபின்னாவென வெளுத்த சம்பவம் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தாக்கிய வாலிபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெண்ணை அடித்தது ஆப்பக்கூடல் கூத்தம் பூண்டியை சேர்ந்த அய்யாசாமி மகன் வல்லரசு தான் என்பது தெரியவந்துள்ளது. வல்லரசு மீது கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். வல்லரசு ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலி என நினைத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாகவும், கீழே தள்ளி கன்னத்தில் அறைந்த போது  தான் அது வேறு பெண் என்பதும் தெரிந்தது. மன்னிப்பு கேட்பதற்குள் அங்கு கூட்டம் கூடியதால் ஓடிவந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் தான் ஒருதலையாக ஒருபெண்ணை காதலித்து வந்த பெண்ணின், ஊர் பெயர் தெரியாது. அந்த பெண் என நினைத்து தான் இந்த பெண்ணை கன்னத்தில் அறைந்து விட்டேன் என கூறியுள்ளார். அவரை நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.