Asianet News TamilAsianet News Tamil

ஹோட்டல ரூம் போட்டு மூணு நாள் உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய காதலன் கைது!! போலீசின் அலட்சியத்தால் மாணவி பலி...

ஹோட்டல் ரூம் போட்டு காதலியை உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றியதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்துகொண்டதால், காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Young man arrested for cheat collage girl
Author
Pollachi, First Published May 5, 2019, 1:00 PM IST

கிருஷ்ணகிரியில் உள்ள ஜோதி நகரைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகள் அபிநயா எம்.எஸ்ஸி படித்துள்ளார். கல்லூரியில் படித்தபோது, இவருக்கும் பாலன் என்ற நபருக்கும் ஃபேஸ்புக் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன். இவரது குடும்பம் அப்பகுதியில் வசதி படைத்தது என்று கூறப்படுகிறது.

நாளடைவில் இருவருக்கும் இடையிலான ஃபேஸ்புக் நட்பு காதலாக மாறியது. கல்லூரிப் படிப்புக்குப் பின்னர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார் அபிநயா. கோவையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் பாலன். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பாக சேலம் வந்த அபிநயா பாலனைச் சந்தித்தார். ஹோட்டல்லே ரூம் போட்டு மூணு நாள் தங்கியிருந்திருக்காங்க. கடைசியில, ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய என்னுடைய சர்டிபிகேட் எடுத்துட்டு வரச் சொல்லிவிட்டு, தானும் எடுத்துக்கொண்டு  எடுத்திட்டு வர்றேன்னு சொல்லிட்டு பொள்ளாச்சிக்கு கிளம்பிப் போனவர் போனது தான் இதனால மனமுடைந்த அபிநயா இதையடுத்து, கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் பாலன் மீது புகார் அளிக்க முயன்றார் அபிநயா. ஆனால், அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் பொள்ளாச்சியில் இருப்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திலும் பாலன் மீது அபிநயா புகார் கொடுத்துள்ளார். ஆனால், அங்கேயும் அதை வாங்க மறுத்தனர் போலீசார். “நீங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது, விடுதியில் அறை எடுத்துத் தங்கியது எல்லாமே சேலத்தில்தான் நடந்துள்ளது. அதனால் அங்கே போய் புகார் கொடு” என்று போலீசார் கூறியுள்ளனர்.

அதன் பிறகு கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி என பலமுறை அலைந்தும், அபிநயாவின் புகார் ஏற்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அபிநயா, கடந்த சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினார் கிருஷ்ணகிரி டவுன் ஆய்வாளர் பாஸ்கர். அது தொடர்பாக விசாரணை நடத்தி, பாலன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 471 (நம்பிக்கை மோசடி செய்தல்), 506 (கொலை மிரட்டல்), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் போலீசார். இதையடுத்து, நேற்று முன்தினம் பாலன் கைது செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios