சென்னையில் கடந்த மாதம் விடுதியில் தற்கொலைக்கு காதலர்களின் காதலி மட்டும்  உயிரிழந்து விட காதலன் புன்னகை மன்னன் கமல் போல  எஸ்கேப் ஆனார்,  முதலில் இது தற்செயலாக உயிர் பிழைத்ததாக நம்பப்பட்ட சூழலில், விசாரணையில் திடீர் திருப்பங்களுடன் இது கொலை என தெரியவந்துள்ளது. 

மூன்று வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்த ஜோடி, தற்கொலைக்கு முயன்ற சமயத்தில்  தற்கொலை செய்துகொள்ள விரும்பாத காதலன், காதலியை மட்டும் சயனைடு சாப்பிட வைத்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு நாடகமாடிய காதலன் தான் கொலை செய்துள்ளார் என பல திருப்பங்களுடன் இது கொலை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் தேதி, காதல் ஜோடி ஒன்று திருவல்லிக்கேணி மியான் சாகிப் தெருவில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியது. மறுநாள் காலை, அந்த ஜோடி அறையை விட்டு வெளியில் வராமல் இருந்ததால் சந்தேகமான லாட்ஜ் ஊழியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், இளம்பெண் உயிரிழந்து கிடந்தனர், இளைஞர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், செளகார்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுமர் சிங் மற்றும் கல்லூரி மாணவி காஜல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் உறுதியானது. சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அறையில் குளிர்பான பாட்டில் கிடந்ததால் விஷத்தை அதில் கலந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகித்தனர். 

விசாரணையின் போது காதலனிடம் பெற்ற சில தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கவே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இறந்துபோன காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் சயனைடு உட்கொண்டு இருப்பதும், கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலும் தெரிய வர போலீசின் விசாரணை இன்னும் வேகமெடுத்தது இதில் மொத்த கவனமும் காதலன் பக்கம் திரும்பியது. அதேவேளையில் அளவுக்கு அதிகமான சயனைடு உடலில் கலந்து காஜல் உயிரிழந்திருக்க, சுமர் சிங் மட்டும் எப்படி லேசான பாதிப்புடன் உயிர் பிழைத்திருப்பார்? இந்த சின்ன சந்தேகமே அவர் தான் கொலை செய்திருப்பார் என உருத்திப்படுத்தியது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சுமர் சிங்கின் நாடகம் அம்பலமானது. காஜலுக்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ஆனால், தனது காதலில் பிடிப்புடன் இருந்த அவர், காதலனுடன் சேர்ந்து வாழத் தான் முடியவில்லை, ஒன்றாக உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். இந்த முடிவை சுமர் சிங்கிடம் சொன்னபோது ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அனால் காதலி காஜல் வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டதாகவும்வும் கூறியுள்ளார்.

உடனே உயிர் பிரிய வேண்டும் என்பதால் இன்டர்நெட்டில் சயனைடை சுமர் சிங் வாங்கியதாகவும், தாம் தங்க நகை வியாபாரம் செய்வதாகவும், தங்கத்தை கரைக்க தேவைப்படுவதாகவும் கூறி அதை அரை கிலோ அளவுக்கு அவர் ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ளார். சயனைடு கிடைத்தவுடன்,  அந்த ஜோடி திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் அறை எடுத்தது. மறுநாள் குளிர்பானத்தில் சயனைடை கலந்து குடிக்க முடிவெடுத்திருந்த அவர்கள், திட்டமிட்டபடி, காஜல் சயனைடு கலந்த குளிர்பானத்தைக் குடித்து விட, காதலி உயிரிழப்பதை பார்த்துக்கொண்டே இருந்த சுமர் சிங்  சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிப்பது போல நடித்துள்ளார். இதைக் கவனித்த காதலி, இதுபற்றி கேட்ட போது சுமர் சிங் தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளார். அதாவது அவள்  உயிர் பிழைத்து விட்டால் உண்மையாகவே குளிர்பானத்தைக் குடிக்கச் சொல்வாளோ? என்பதால்  துப்பாட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

மேலும்,மற்றவர்கள் பார்க்கும் பொது சந்தேகம் வராத அளவுக்கு விடுதி அறையில் போலீசார் சென்று பார்த்த போது வெட்டி வெட்டி இழுப்பது போல் நடித்து சுமர் சிங் நடித்து ஏமாற்றியதும்  விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விசாரணையின் துவக்கத்தில், சயனைடு பவுடரை குளிர்பானத்தில் கலந்த போதும், வாயருகே வைத்து குடிப்பது போல் நடித்த போதும் நெடி ஏறி நுரையீரல் வரை பரவிய காரணத்தால் தான்அவரும் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என நம்பியுள்ளனர்.