திருவண்ணாமலை மாவட்டத்தில் விலாரிப்பட்டு என்ற கிராமத்தில் தம்பதி சுரேஷ் - அகிலா வசித்து வந்தனர். சில வருடங்களுக்கு கல்யாணமான இந்த ஜோடி சந்தோஷமாக தான் வாழக்கையை நடத்திக்கொண்டிருந்தது.

காதலித்த போது நெருக்கமாக எடுத்த போட்டோ, வீடியோக்களை மாப்பிள்ளைக்கு வாட்ஸாப்பில் அனுப்பிவிட்டார் காதலன். இதனால் நடக்க இருந்த கல்யாணமே நின்று போனதால் அவமானத்தில், இளம்பெண் விஷத்தையும் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே உள்ள மணல் அகரத்தை சேர்ந்தவர் சிவஞான சம்பந்தம். இவருக்கு வயது 31. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் காலேஜில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே காலேஜில் படித்த ஒரு மாணவியும்  உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர், கடந்த மாதம் 30-ந்தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது முடிந்துள்ளது. காதலிக்கு விரைவில் கல்யாணம் நடக்க இருந்ததை கேள்விப்பட்ட சிவஞானசம்பந்தம் பயங்கர ஆத்திரம் அடைந்தார். 

எப்படியாவது தனது காதலியின் கல்யாணத்தை நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து, பெண்ணை பற்றி தப்பு தப்பாக அவதூறு சொன்னார். ஆனாலும் அவர்கள் நம்புவதாக இல்லை, அப்போது இருவரும் காதலித்த போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோவையும் மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர். இதில் மனமுடைந்து போன பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார். வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததை கண்ட குடும்பத்தினர், பதறியடித்து கொண்டு பெண்ணை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, பெண்ணின் தந்தை சிவஞானசம்பந்தத்தை சந்தித்து இதை பற்றி கேட்டதற்கு, உன் மகளை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த கொலை மிரட்டல் குறித்து பெண்ணின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அதன் பேரில் பாலிடெக்னீக் ஆசிரியர் சிவஞான சம்பந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.