திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய  காதலியை ஜோதிடர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர்  கந்தசாமி இவரது மகள் வெள்ளையம்மாளுக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த நபருக்கும்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது , திருமணமான மூன்று  மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்தார் வெள்ளையம்மாள்,  பின்னர் தன் தந்தை வீட்டில் வசித்து வந்தார் வெள்ளையம்மா. 

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற ஜோதிடருக்கும்  வெள்ளை அம்மாளுக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டது . பின்னர் அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர் . அதேசமயம் ஜோதிடர் முத்து வெள்ளையம்மாளிடம் அடிக்கடி பணம் பெற்று ஜாலியாக செலவழித்து வந்துள்ளார் . ஒருகட்டத்தில் உஷாரான வெள்ளையம்மாள் விரைவில் தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறு முத்துவிடம் வற்புறுத்தியுள்ளார் .  ஆனால் தனக்குத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என  கூறி தப்பித்து வந்துள்ளார். ஆனால் வெள்ளையம்மாள் விடுவதாக தெரியவில்லை.  இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வெள்ளையம்மாளை தொலைபேசியில் அழைத்த ஜோதிடர் முத்து ,  திருச்சி அருகே உள்ள தொடையூருக்கு வந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கு கூறி வெள்ளையம்மாளை  அழைத்துள்ளார் . 

நீண்ட நாட்களாக தான் எதிர்பார்த்தபடி திருமணத்திற்கு  முத்து  ஒப்புகொண்டார் என  எண்ணிய வெள்ளையம்மாள் முத்துவின் வார்த்தைகளை நம்பி தொடையூருக்கு சென்றார் அங்கு  வெள்ளையம்மாளை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்ற முத்து ,  அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார் பின்னர்  அதே இடத்திலேயே தான் மறைத்து வைத்திருந்த கத்தயால் வெள்ளையம்மாளின்  கழுத்தை அறுத்து கொலை செய்தார் முத்து.  பின்னர்  ஆற்றங்கரை ஓரத்திலேயே புதைத்துவின்னு அங்கிருந்து தலைமறைவானார்.  இந்நிலையில் தன்  மகளை காணவில்லை என தந்தை கந்தசாமி  போலீசில் புகார் கொடுத்தார் அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் காதலன் முத்து போலீஸில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .