நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தக்கலையைச் சேர்ந்த மெர்சி என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார். அவர் வள்ளியூரில்  உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று இரவு வேலை விட்டு விடுதிக்குச் செல்வதற்காக மெர்சி வள்ளியூர் பேருந்து நிலையம் வந்தார். அங்கிருந்து பேருந்தில் சென்று விடுதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த திருக்குறுங்குடி மகிழடி சேர்ந்த ரவி என்பவர் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.  ஆனால் அதற்கு மெர்சி மறுக்கவே ஆத்திரமடைந்த ரவி கத்தியை எடுத்து மெர்சியின் கழுத்தில் ஓங்கி குத்தினார்.

இதில் படுகாயமடைந்த மெர்சி மயக்கமடைந்து கீழே விழுந்தார்.  அவர் கழுத்தில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் மெர்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மெர்சியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனர்.

இதையடுத்து ரவியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இளம்பெண் ஒருவர்  காதலிக்க மறுத்ததால் அவரை இளைஞர் ஒரவர் குத்திக்கொன்ற நிகழ்வு வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது