திருச்சியில் மகளின் தோழியை கற்பழித்து கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு திருச்சி மகிளா கோர்ட் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

திருச்சி திருவானைக்காவல் மணல்மேடு 5-ம் பிரகாரம் பகுதியை சேர்ந்த புரோட்டா மாஸ்டர் நடராஜன், இவருக்கு கல்யாணமாகி  மனைவி மற்றும் 15 வயதில் மகள் உள்ளனர். மகள் அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ம் வகுப்பு படித்து வந்தார். வீடு அருகருகே இருந்ததால் திவ்யா, நடராஜன் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரது மகளுடன் பேசுவதுண்டு. இதனால் நடராஜனும், திவ்யாவும் பேசி பழகி வந்தனர். திவ்யாவும் தன்னுடைய தோழியின் தந்தை தானே என்று சிரித்து பழகியுள்ளார்.

இந்தநிலையில், திவ்யா அழகில் மயங்கிய நடராஜனுக்கு மோகம் ஏற்பட்டது. திவ்யாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணி, வீட்டில் மனைவி, மகள் இல்லாத நேரத்தில் திவ்யா அந்த சமயத்தில் , அவரை பலவந்தமாக வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்தார். மகள் வயதில் உள்ள பெண் என்றும் கூட பார்க்காமல் திவ்யாவை பலமுறை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். இதனால் செல்வி கர்ப்பமடைந்தார். 

இதையறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், இது பற்றி கேட்ட போது செல்வி நடந்த விவரத்தை சொன்னதும், இது குறித்து செல்வியின் பெற்றோர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிந்த போலீசார் நடராஜனை கைது செய்தனர். இதை சம்பவம் கடந்த 2017 நவம்பரில் நடந்தது. நடராஜன் கற்பழித்ததால் கர்ப்பமான திவ்யா திடீரென கீழே விழுந்ததில் அவரது கர்ப்பம் கலைந்ததுடன், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்ததை அடுத்து நீதிபதி வனிதா இன்று தீர்ப்பு கூறினார். அதில் மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய நடராஜனுக்கு 12ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.