அண்மையில் ஏப்ரல் 2ஆம் தேதி 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வறுமையின் கொடுமையில் இருக்கும் இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண்ணைக் கடத்திச் சென்று பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 6 மாதங்களாக கூட்டாக உல்லாசம் அனுபவித்துள்ளது தெரியவந்துள்ளது. 

காஞ்சிபுரத்தில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்ட ஒரு சிறுமி, பெற்றோருக்கு உதவ கிடைத்த வேலைகளைச் செய்துவந்துள்ளார். தினசரி கூலி வேலை பார்த்துவந்த அவருக்கு அவருடைய பக்கத்த்து வீட்டில் இருந்த பெண், ஒரு வீட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் பக்கத்து வீட்டுப் பெண் சிறுமியின் பெற்றோரிடம் ரூ 5000 கொடுத்துவிட்டு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். சுமார் அந்தமாதம் கழித்து இந்த ஏப்ரலில்தான் சிறுமி வீடு திரும்பி இருக்கிறார். மேலும், இதேபோல காஞ்சிபுரத்திலும் சென்னையிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது போதாதென்று சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ மற்றும் படங்களை எடுத்து தாங்கள் சொல்வதுபோல் நடக்காவிட்டால் அவற்றை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என சிறுமியின் பெற்றோரிடமும் காட்டிவிடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும், கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை கண்காணிப்புடன் குடும்பத்தினருடன் போனில் பேச அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில், ஈஸ்டர் திருநாளுக்காக சிறுமியின் தாய் சிறுமியை வீட்டுக்கு அழைத்துவருமாறு கோரியுள்ளார். அம்மா கட்டாயப்படுத்திக் கேட்டதும் சிறுமியை வீட்டில் கொண்டுவிட்டுள்ளனர். வீட்டுக்கு வந்த சிறுமி தன் அம்மாவிடமும் போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியிட்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கடத்திச் சென்றவர்களைப் பிடிக்க விசாரித்து வருகிறார்கள்.